இந்தியர்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு: விசா இல்லாமல் அனுமதிக்கும் நாடுகள்
27 Sep,2023
.
இந்தியர்கள் விசா இல்லாமல் சில நாடுகளுக்கு பயணிக்க முடியும் என இந்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டள்ளது.
அந்த வகையில் மாலைத்தீவு, இந்தோனேசியா, மகாவ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும் என வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
.
பூட்டான்
பூட்டான் செல்வதற்கு செல்லுபடியாகும் ஏதேனும் ஒரு பயண ஆவணத்தை கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதன் போது குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் இந்திய கடவுச்சீட்டு மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை என்பன அவற்றுள் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
.
மாலைத்தீவு நாடு இந்தியப் பயணிகளுக்கு VOA-வை (Visa on Arrival) இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இந்தியர்களுக்கான ''ஆன்-அரைவல் டூரிஸ்ட் விசாக்கள்'', வரும் நாளிலிருந்து 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும், இது 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படிருப்பதாக கூறியுள்ளது.
இந்தோனேஷியா
இந்தோனேஷியாவிற்கு இந்தியப் பயணிகள் விசா இல்லாமல் செல்ல அனுமதித்தியிருப்பினும் பயண காலம் 30 நாட்களுக்குள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ''இமிக்ரேஷன் கவுண்டரில்'' விசா விலக்கு முத்திரையை (visa exemption stamp) பெற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் 30 நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அங்கு செல்லும் போது VOA-க்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாவ் 30 நாட்கள் மட்டுமே பயணம் செய்யத் திட்டமிடும் இந்தியப் பயணிகளுக்கு மகாவ் நாட்டிற்குச் செல்ல விசா தேவையில்லை. என்பதுடன் இந்நாட்டில் நுழையும் ஒருவர் நுழையும் திகதியில்யில் குறைந்தது 6 மாதங்களுக்குச் செல்லுபடியாகும் கடவுசீட்டை வைத்திருக்க வேண்டுமென தெரித்துள்ளது.
இலங்கை (VOA)
இந்திய கடவுசீட்டை வைத்திருந்தால் இலங்கை செல்லும் போது VOA பெற்றுக் கொள்ளலாம். எனினும் ஆவணத்தைப் பெற ஒருவர் நாட்டிற்குச் செல்லும் முன் இலங்கையின் Electronic Travel Authorisation-ல் (ETA) விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தாய்லாந்து (VOA)
சுற்றுலா நோக்கங்களுக்காகத் தாய்லாந்து செல்லும் இந்தியர்கள் விசா ஆன் அரைவல் திட்டத்தின் கீழ் தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாகவும் குறைந்தது 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் கடவுசீட்டை ஒருவர் வைத்திருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.