ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்
23 Sep,2023
பாகிஸ்தான் வழக்கமான குற்றச்சாட்டை கூறி வருகிறது. உலகின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் படிக்க நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின்
78-வது அமர்வு கூட்டம் நடந்தது. இதில் பேசிய பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக்கக்கர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய பிரதிநிதி பெடல் கெஹ்லோட் பேசியதாவது:- பாகிஸ்தான் வழக்கமான குற்றச்சாட்டை கூறி வருகிறது. இந்தியாவுக்கு எதிராக முற்றிலும் பொய் பிரசாரத்தினை பாகிஸ்தான் செய்கிறது. அடிப்படை ஆதராமற்ற குற்றச்சாட்டுகளை தவறான
முறையில் தெரிவித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்பான விவகாரங்கள் முற்றிலும் இந்தியாவுக்கு உட்பட்டது. எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் மோசமாக இருக்கிறது. உலகின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.