உலக நாடுகளில் கடைசி இடத்தை பிடித்த இந்தியாஸ எதில் தெரியுமா?
18 Sep,2023
போர்ச்சுகல் நாடு முதலிடடத்தை பிடித்துள்ளதபோர்ச்சுகல் நாடு முதலிடடத்தை பிடித்துள்ளத
இந்தியாவில் மிக குறைந்த அளவில் விவகாரத்து நடப்பதற்கு இந்திய சட்ட அமைப்புகளே காரணம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உலகிலேயே அதிக விவாகரத்தை பெறும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மிகக் குறைந்த சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்திருப்பது இந்திய நெட்டிசன்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் விவாகரத்து சதவீதம் 1% ஆக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் வியட்நாம் உலகிலேயே விவாகரத்து குறைவாக பெறும் இரண்டாவது நாடாக இருக்கிறது. இருப்பினும் இங்கு 100-இல் 7 திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல் தெரிவிக்கின்றன.
உலகிலேயே அதிக விவகாரத்தை பெறும் நாடாக ஐரோப்பா நாடான போர்ச்சுக்கல் மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு 94 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் நாட்டில் விவாகரத்து சதவீதம் 85 ஆக உள்ளது. இதேபோன்று பின்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்டவைகளிலும் விவாகரத்து ஆகும் சதவீதம் 50% யை தாண்டி உள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் 50 சதவீதம் பேர் விவாகரத்து செய்து கொள்வதாக தகவல் தெரிவிக்கிறது.
இவற்றையெல்லாம் ஒப்பிடும்போது இந்தியாவில் மிக மிக குறைந்த அளவுக்கே விவாகரத்து நடப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கு இந்திய சட்ட அமைப்புகளே முக்கிய காரணம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Share this: