கார் நிறுவனங்களுக்கு இனி 6 ஏர்பேக்குகள் இருந்தால்தான் 5 ஸ்டார் ரேட்டிங்.. புது உத்தரவு!
18 Sep,2023
மத்திய அரசு சாலை பாதுகாப்பு அதிகரிப்பதற்காக புதிய திட்டங்களை அறிமுகம் செய்கிறது. தற்போது தேசிய தர கட்டுபாட்டு ஆணையத்தின் ஐந்து நட்சத்திர குறியீடு பெறவேண்டும் என்றால், கார்களில் 6 ஏர்பேக்குகள் பொருத்தபடவேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது கார் வாங்குவோர் மத்தியில் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய வாகன உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) நடத்திய 63ஆவது ஆண்டு மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில், கட்டாய ஆறு-ஏர்பேக் விதி 2023 அக்டோபர் முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். வாகனத் துறையால் எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோக சங்கிலி தடைகள், பெரிய பொருளாதார இழப்புகளின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பயணிகள் கார்களில் (M-1 வகை) அக்டோபர் 1, 2023 முதல் குறைந்தப்பட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்ததாக நிதின் கட்கரி கூறினார்.
இந்நிலையில், தேசிய தர கட்டுபாட்டு ஆணையத்தின் ஐந்து நட்சத்திர குறியீடு பெற இந்திய தயாரிப்பு கார்கள் 6 ஏர்பேக்குகளை கொண்டு இயங்கவேண்டியது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஏற்படுத்தினாலும், கார் தயாரிப்பு நிறுவனங்களிக்கு கூடுதல் செலவை அளிக்கிறது. இதனால், கார்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்படும் என்று கருதப்படுகிறது