,
நிராகரிப்பு காரணம் பற்றிய பயனாளிகள் தரப்பு விளக்கத்தை, மேல்முறையீடாக தாக்கல் செய்யலாம். ஒருவேளை விண்ணப்பத்தில் குறைகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
விண்ணப்பத்தின் முடிவு நிலை என்னவாயிற்று என்பது குறித்து, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் 18ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.
அதில், விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான விவரங்களை அறிந்து கொள்வதற்கான இலவச அலைபேசி எண்களையும் மறக்காமல் குறிப்பிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் அதில் தெரிவிக்கப்படும்.
நிராகரிப்பு காரணம் பற்றிய பயனாளிகள் தரப்பு விளக்கத்தை, மேல்முறையீடாக தாக்கல் செய்யலாம். ஒருவேளை விண்ணப்பத்தில் குறைகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற நாட்களில் இருந்து மேல்முறையீட்டு விண்ணப்பங்களைப் பெற 30 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது.
தனி நபர்கள் மூலம் பெறும் புகார்களுக்கு வருவாய் கோட்டாட்சியரே விசாரணை அலுவலராகச் செயல்படுவார்.
நேரில் செல்ல இயலாதவர்கள் இ-சேவை மையம் மூலமும் மேல்முறையீடு செய்யலாம். அதற்கும் 30 நாட்கள்தான் அவகாசம்.
இணையம் மூலம் பெறப்பட்ட மேல்முறையீடுகள் அரசு தகவல் தரவுகளோடு ஒப்பிடப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
கள ஆய்வு தேவைப்படும் எனில், அதுவும் மேற்கொள்ளப்படும்.
அந்தக் கள ஆய்வுக்கான முடிவுகள், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வாயிலாக சரிபார்க்கப்படும்.
இந்த மேல்முறையீடு தொடர்பான நடைமுறைகள் அனைத்துமே இணையம் வழியாகவே செய்யப்படவுள்ளன.
ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பொருந்துவதாக இருந்தால் உரிமைத் தொகை நிராகரிக்கப்படலாம்.
ரூ.1,000 உரிமைத் தொகையைப் பெற அரசு நிர்ணயித்த தகுதிகள் - ஒரு நினைவூட்டல்
குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனப் பெயரிடப்பட்ட பெண்
ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவரது மனைவி
திருமணமாகாத பெண், கைம்பெண், திருநங்கை தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவியாகக் கருதப்படுவர்.
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் ஒருவர் மட்டும் தேர்வாவார்.
எதனால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்?
ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பொருந்துவதாக இருந்தால் உரிமைத் தொகை நிராகரிக்கப்படலாம்.
ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர்கள்
ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள்/ வருமான வரி செலுத்துபவர்கள்
ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கும் அதிகமான புன்செய் நிலம் வைத்திருப்போர்.
ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தும் குடும்பங்கள்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஊழியர்கள்
வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்
ஊராட்சி மன்ற தலைவர்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்கள்
ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் பெறுவோர்
சமூகப் பாதுகாப்பு திட்ட ஓய்வூதியமும், அரசிடமிருந்து ஓய்வூதியமும் பெறும் குடும்பங்கள்
"முப்பது நாட்கள் அவகாசத்துக்குள் தங்களது விவரங்கள் குறித்து விண்ணப்பதாரர்கள் கேட்டறிந்து கொள்ளலாம்."
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம். ஆனால், அவர்களுக்கும் தகுதி வகைப்பாட்டு முறைகள் பொருந்தும்.
ஒருவேளை நீங்கள் விண்ணப்பிக்கையில் கொடுத்த மொபைல் எண் ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலோ, நெட்வொர்க் சிக்னல் இல்லாத இடத்தில் இருந்தாலோ, அல்லது ரீசார்ஜ் செய்யாத காரணத்தால் உள்வரும் அழைப்போ, குறுஞ்செய்தி வருகையோ தடைப்பட்டிருந்தாலோ உங்களுக்கு குறுஞ்செய்தி வராமல் போக வாய்ப்பிருக்கும். எனவே அதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் “கள ஆய்வுப் பணிகளுக்கு அலுவலர்கள் வரும்போது பூட்டப்பட்டிருக்கும் வீடுகள், ஆட்கள் இல்லாத வீடுகள், புலம்பெயர்ந்து இருந்தால் அவர்களின் விண்ணப்பங்கள் காத்திருப்பில் வைக்கப்படும்.
முப்பது நாட்கள் அவகாசத்துக்குள் தங்களது விவரங்கள் குறித்து விண்ணப்பதாரர்கள் கேட்டறிந்து கொள்ளலாம்,” எனவும் கோவை மாவட்ட டிஆர்ஓ ஷர்மிளா தெரிவித்துள்ளார்.