நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானுக்கு 2வது முறையாக சம்மன்
14 Sep,2023
சென்னை: நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்ற வளசரவாக்கம் போலீசார் சம்மனை வழங்கினர். விசாரணைக்காக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக சீமானுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகவில்லை. ஆவணங்களை தருமாறு சீமானின் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் கேட்ட நிலையில் மீண்டும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.