ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தது ஆப்பிரிக்க யூனியன்! பிரதமர் மோடி அறிவிப்பு!
09 Sep,2023
டெல்லியில் உள்ள பிரகதி அரங்கில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது :
இந்த மாநாட்டின் முறையான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன், மொராக்கோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். ஒட்டுமொத்த உலக சமூகமும் மொராக்கோ மக்களுடன் நிற்கிறது.
ஜி20 மாநாட்டின் தலைவராக உங்கள் அனைவரையும் இந்தியா வரவேற்கிறது. ஜி 20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் புதிய உறுப்பினராக இணைந்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். அனைவரின் ஒப்புதலுடன், ஆப்பிரிக்கா யூனியன் நிரந்தர உறுப்பினராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தா