ஏப்ரல் மாதம் 2022 முதல் மார்ச் மாதம் 2023 வரையிலான 12 மாத காலங்களுக்குள் கிட்டத்தட்ட 15,000 மேற்பட்ட இந்திய டெக் ஊழியர்கள் கனடாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்தியா மட்டுமல்ல, பல உலக நாடுகளிலும் மிகப்பெரிய அளவு வளர்ச்சியை அடைந்துள்ள துறை மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் என்று கூறலாம். இடையில் கோவிட் தொற்று காரணமாகவும், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி அடைந்து வரும் நிலையிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது ஒரு பக்கம் இருந்தாலுமே, தொடர்ந்து தொழில்நுட்பத் துறையில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை பலரும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யுகே உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். இதில் சமீபத்தில் கனடா என்பது இந்தியர்கள் விரும்பும் நாடாக மாறி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டில் மட்டுமே அதாவது ஏப்ரல் மாதம் 2022 முதல் மார்ச் மாதம் 2023 வரையிலான 12 மாத காலங்களுக்குள் கிட்டத்தட்ட 15,000 மேற்பட்ட இந்திய டெக் ஊழியர்கள் கனடாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
தொழில்நுட்பத் துறையில் திறன் வாய்ந்தவர்களை ஈர்க்கும் மிகப்பெரிய நாடாக கனடா மாறியிருக்கிறது என்பது Khalsa Vox நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றில் வெளியாகி இருக்கிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தென்அமெரிக்காவின் டெக்னாலஜி கவுன்சில்கள் மற்றும் கனடாவின் டெக் நெட்வொர்க் ஆகிய 2 அமைப்புகளும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளது. இதில் கனடாவின் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் ஊழியர்களின் தேவை அதிகரிப்பது அதிகரிப்பதுதான் முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை தொடர்ந்து நைஜீரியா நாட்டில் இருந்து 1,808 ஊழியர்கள் கனடாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் இமிக்ரேஷன் கொள்கைகள் மிக சுலபமாக இருக்கிறது மற்றும் கனடாவில் லேபர் காஸ்ட் ஓரளவுக்கு சமாளிக்க கூடியதாக இருப்பதாலும் கனடாவைப் பலரும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
மாண்ட்ரியல் மற்றும் மிஸ்சிஸ்சாகா ஆகிய இரண்டு கனடிய நகரங்களும் உலகம் முழுவதும் இருந்து திறமைசாலியான ஊழியர்களை ஈர்க்கின்றன. மிஸ்சிஸ்சாகாவில் 1,000க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட டெக் நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள். டெக் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக இந்த ஊர் இருக்கிறது.
மாண்ட்ரியல் நகரைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த டெக் வளர்ச்சி, 2015 முதல் 2020 வரை 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தொழில்நுட்ப ஊழியர்களை ஈர்க்கும் கனடாவின் சாப்ட்வேர் துறை, தற்போது அமெரிக்காவிச் சேர்ந்த ஐடி ஊழியர்களை கூட தன் பக்கம் திருப்பியுள்ளது. சிகாகோ, வாஷிங்டன், பாஸ்டன் உள்ளிட்ட மிகப்பெரிய அமெரிக்கா நகரங்களில் இருந்து கூட கனடாவில் பணியாற்ற விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.