சந்திரயான் 3க்கு கம்பீரமாக கவுன்ட்டவுன் கூறிய பெண் விஞ்ஞானி காலமானார்
04 Sep,2023
இஸ்ரோவில் ரொக்கெட் ஏவப்படும் போது அதனை வர்ணனை செய்துவந்த விஞ்ஞானி வளர்மதி உயிரிழந்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (04) காலமானார்.
இவர் கடந்த 6 வருடங்களாக இஸ்ரோ ஏவிய மிக முக்கிய ரொக்கெட்டுகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றியுள்ளார்.
இரங்கல்
ரொக்கட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்னர் அறிவிக்கப்படுகின்ற கவுண்டவுன் விஞ்ஞானிகளை மட்டுமல்லாமல் அனைவரையும் பரபரப்பின் உச்சத்திற்கு இவர் கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய குரலிற்கு சொந்தக்காரரான வளர்மதியின் இறப்பு அனைவர் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திற்கும் இவரே வர்ணனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.