சீனக் கப்பல் விவகாரம்: கடும் அதிருப்தியில் இந்தியா
04 Sep,2023
பதினொராவது மணித்தியாலத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை ஒத்திவைப்பதன் மூலம், புது டில்லி தனது அதிருப்தியின் நுட்பமான செய்தியை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என்று இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
மேலும் ஒரு சீனக் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் நுழைய அனுமதித்ததற்காக கொழும்புக்கு தமது அதிருப்தியை காட்டும் வகையிலேயே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.
தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் கடற்படை கப்பல்களை இலங்கைக்குள் அனுமதித்ததற்காக இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும், அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த மாதம் சீனாவின் ஸி யான் 6 கப்பலுக்கு அனுமதி வழங்கியது.
அது ஒரு கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்ளும் 60 பேர் கொண்ட ஒரு அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் என்ற அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்பட்டதாக இலங்கை கூறுகிறது எனினும் சீனாவின் கப்பல்களுக்கு இராணுவ நோக்கங்களும் உள்ளன என்று இந்தியா சந்தேகிப்பதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.