பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடவில்லை என்றால் நானும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவவில்லை என்றும் சட்டமன்றத்திற்கு தான் போட்டியிடுவேன் என தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயலட்சுமியின் புகார் தொடர்பாகவும் பதிலளித்துள்ளார்.
ஈரோடு வில்லரசம்பட்டியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு , மேற்கு , பெருந்துறை , மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான கலந்தாய்வுக்கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான் , சிஏஜி அறிக்கையை மத்திய அரசு இழப்பு என்று தான் சொல்வார்கள், ஊழல் என சொல்லமாட்டார்கள் என்றும் பா.ஜ.க - காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் நாசமான கட்சி. இரண்டையும் அகற்ற வேண்டும் என்றார்.
..
மோடி தமிழகத்தில் போட்டியிடவில்லை என்றால் தானும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் சட்டமன்றத்திற்கு தான் போட்டியிடுவேன் என்று கூறினார்.
விஜய் அரசியல் வருகை
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம். ஆனால் எங்கள் கொள்கை முடிவு தனித்து போட்டி என்பது தான். விஜய் அரசியலுக்கு முதலில் வந்து, அவரது கொள்ளை என்வென்று தெரிவிக்கட்டும் அதன் பிறகு பேசலாம்.
காங்கிரஸுடன் எதற்காக கூட்டணி?
சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்கை உயர்நீதிமன்றம் தானாக விசாரணைக்கு எடுத்ததை வரவேற்பதாகவும் , காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும்?, கர்நாடகா அரசு அவர்கள் மாநிலத்தை காக்கும் போது தமிழகம் ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்கிறது என்று சீமான் கேள்வி எழுப்பினார்..
விஜயலட்சுமி விவகாரம்
நடிகை விஜயலட்சுமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இவ்வளவு நேரம் கேள்விகளை கேட்ட நீங்கள், இப்போது ஏன் கேவலத்தை கேட்கிறீர்கள் என்று ஆவேசமடைந்தார். பின்னர், விஜயலட்சுமி உண்மையான புகாரளித்தால் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்றும், இது போலி புகார் என்றும் சாடினார். தனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் அரசியல் பின்னணி இருக்கலாம் என்றும் சீமான் சந்தேகம் தெரிவித்தார்.
அண்ணாமலை நடைபயணம் எடுபடவில்லை
பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயண அரசியல் தமிழகத்தில் எடுப்படவில்லை என்ற சீமான், டாஸ்மாக்கை புனித தீர்த்தம் என்ற பட்டியலில் தான் இங்கு வைத்துள்ளார்கள் என்றார்.
கலவரங்களால் கட்சியை வளர்த்து ஆட்சிக்கு வந்தவர்கள் பா.ஜ.கவினர் தற்போது , மணிப்பூர் , ஹரியானா போன்ற மாநிலங்களில் திட்டமிட்டு கலவரங்களை பரப்புகின்றனர் எனவும் சீமான் குற்றம்சாட்டினார்.