கொழுப்பு இல்லாத தாவர இறைச்சி.. இந்திய விஞ்ஞானி!
20 Aug,2023
தாவர அடிப்படையிலான இறைச்சிதாவர அடிப்படையிலான இறைச்சி
இறைச்சி என்றால் அதில் கண்டிப்பாக கொழுப்பு என்பது இடம்பெற்று இருக்கும். இந்த நிலையில், தாவரம் சார்ந்த இறைச்சியில் கொழுப்பு இல்லாமல் இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் உருவாக்கியுள்ளார்.
..
இந்திய வம்சாவளியான UK -வில் வசிக்கும் விஞ்ஞானி ஒருவர் எந்த வித கொழுப்பும் சேர்க்காமல் தாவரம் சார்ந்த அதிக ஜூசியான இறைச்சியை அறிமுகப்படுத்தி உள்ளார்.
.
இறைச்சிக்கு பதிலாக தாவரம் சார்ந்த சில உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை சாப்பிடும் போது மிக வறண்டதாகவும் துவர்ப்பாகவும் இருப்பது ஒரு மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது. யுனிவர்சிட்டி ஆஃப் லீட்சில் உள்ள ப்ரொஃபசர் அன்வேஷா சர்க்கார் அவர்களால் வழிநடத்தப்பட்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று ஜூஸியான மற்றும் கொழுப்பு போன்ற அமைப்புடைய தாவரம் சார்ந்த புரதங்களை இறைச்சிகளைப் போல உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இந்த மாற்றத்தை உருவாக்க அந்த விஞ்ஞானிகள் குழு மைக்ரோ ஜெலேஷன் என்ற செயல்முறை மூலமாக பிளான்ட் புரோட்டீன் மைக்ரோஜெல்களை உருவாக்கியுள்ளனர். பொதுவாக வறண்ட அதேசமயம் சொரசொரப்பான அமைப்பு கொண்ட தாவர புரோட்டீன்கள் நீருக்குள் வைக்கப்பட்டு வெப்பப்படுத்தப்படுகின்றன. இந்த செயல்முறை புரோட்டின் மூலக்கூறுகளின் அமைப்பை மாற்றி அமைக்கிறது. அவை ஒன்று சேர்ந்து ஒன்றிணைக்கப்பட்ட ஒரு நெட்வொர்க் அல்லது ஜெல்லை உருவாக்குகின்றன. இந்த ஜெல்லில் நீரானது அடைப்பட்டு அவற்றிற்கு ஜூஸியான ஒரு அமைப்பை கொடுக்கிறது.
இந்த ஜெல் பின்னர் ஹோமோஜனைஸ் செய்யப்படுவதால் அந்த புரோட்டின் நெட்வொர்க் சிறு சிறு துகள்களாலான மைக்ரோ ஜெல்களாக உடைகிறது. அழுத்தத்தின் கீழ் இவை சாப்பிடும் பொழுது நமக்கு எப்படி கிடைக்குமோ அதே போல ஜூஸியான அமைப்பிற்கு மாறிவிடுகின்றன.
இந்த புரதம் சார்ந்த புரோட்டீன் மூலமாக மக்கள் தங்களது புரத உட்கொள்ளலுக்காக விலங்கு சார்ந்த பொருட்களை சாப்பிடுவது குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு நம்புகிறது. மேலும் உலக வானிலை மாற்றத்தில் இந்த படி முக்கியமானதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
விலங்கு சார்ந்த உணவுப் பொருட்களை பெறும் செயல்முறையில் ஆண்டுதோறும் 18 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைக்ரோஜெல்கள் மிகவும் சாஃப்டாகவும், ஜூஸியாகவும் இருப்பதால் விலங்கு சார்ந்த கொழுப்புக்கு பதிலாக உணவு செயலாக்க தொழிலில் இவை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.