இ.எம்.ஐ.யில் மாற்றமிருந்தால் கடன் வாங்கியவர்களிடம் தெரிவிக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி
18 Aug,2023
கடன்களை வசூலிக்கும்போது அதற்கான கட்டணங்கள் பற்றி வெளிப்படைத்தன்மை தேவை என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாறுபட்ட வட்டி விகிதத்திலிருந்து நிலையான வட்டி முறைக்கு மாறும்போது கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ
அதேபோல, தவணை தொகை அல்லது செலுத்தும் கால அளவை வாடிக்கையாளர் விருப்பப்படி மாற்ற அனுமதிக்கவேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அபராதம் என்ற பெயரில் கூடுதலாக கட்டணம் வசூலிக்காமல் விதிமுறைகளுக்கு உட்பட்ட அளவிலேயே வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.