இனி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு டாட்டா..! இறுதிகட்ட பணிகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..!
05 Aug,2023
. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் 99% பணி முடிவடைந்த நிலையில் விரைவில் திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
.
இதற்கான பணி சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூபாய் 400 கோடி செலவில் நடந்து வருகிறது புதிய பேருந்து நிலையத்தை திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திறந்து இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது புதிய பேருந்து நிலையம் பணி வேகமாக நடந்து வருகின்றன தினந்தோறும் 1.5 லட்சம் பயணிகளை கையாளு வகையில் இந்த புதிய பேருந்து நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 200 பஸ்கள் 270 கார்கள் மற்றும் 3500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துவிட்டது.
.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளது இதற்காக தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 99 சதவீதம் பணி முடிவடைந்து உள்ள நிலையில் விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.