2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசா..
12 Jul,2023
.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசா எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது சீன தூதரகம்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக வெளிநாட்டினருக்கு பெய்ஜிங் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சீனாவுக்கு செல்லும் வெளிநாட்டினருக்கு விசா பெறுவதில் சிக்கல் இருந்து வந்தது. இதையடுத்து இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் தனது கோவிட்-19 விசாக் கொள்கையை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு புதுப்பித்தது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு - ரூ. 24,999/-
மேலும் சீனாவுக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டினர் மற்றும் அவர்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்களின் விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் விசா வழங்கும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை மேலும் சீன அரசு தளத்தியது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள சீன தூதரக செய்தித் தொடர்பாளரான வாங் ஸியாஜியன், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசா குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும், சீனாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு 71,600 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வணிகம், படிப்பு, சுற்றுலா, வேலை, குடும்பம் ஒன்றுகூடல் போன்ற நோக்கங்களுக்காக இந்திய நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சீன நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளை விரைவில் நீக்குவதையும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மக்களிடையே மக்கள் பரிமாற்றத்தை மீண்டும் தொடங்குவதை சீனா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் வாங் ஸியாஜியன் பதிவிட்டுள்ளார்.