வட இந்தியாவில் வெளுத்து வாங்கிய மழை: ஆறாக மாறிய சாலைகள்- 12 பேர் பலி.
10 Jul,2023
டெல்லியில் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மலை இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் நிலச்சரிவு தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் டெல்லி, இமாச்சால பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. குறிப்பாக டெல்லியில் சாலைகள் ஆறுபோல் காட்சியளித்தன. எங்குபார்த்தாலும் வெள்ளமாக காட்சியளித்தன. Powered By கெஜ்ரிவால் அரசு மீது மக்கள் அதிருப்தி தெரிவிக்க, ஞாயிறுக்கிழமை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவில்லை. மழை வெள்ளத்தை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்த கெஜ்ரிவால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
.
டெல்லி மாநிலம் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மழையை பெற்றுள்ளது. இது 1982-ம் ஆண்டுக்குப்பின் ஒரே நாளில் பெய்ய அதிகனமழை ஆகும். ஜூலை 15-ந்தேதி வரை கனமழை மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதச மாநிலத்தில் சுற்றுலா இடங்களில் திடீரென வெள்ளப்பெருக்கு காரணமாக கார் வெள்ளத்தில் அடித்துச் சென்ற காட்சியை பார்க்க முடிந்தது. பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட, மக்கள் சிக்கி தவித்தனர். பின்னர் மீட்புப்படையினர் அவர்கள் மீட்டனர். இந்திய வானிலை மையம் டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
.