மகளிர் உரிமைத் தொகை ரூ 1000; விண்ணப்ப படிவம் போட்டோ முழு விவரம் இங்கே!
09 Jul,2023
ஆதார், குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவைற்றை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், பயனாளிகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மாவட்டத் தோறும் மேற்கொள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார அளவுகோல் மற்றும் இதர விவரங்களை கொண்டு தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் நேற்று வெளியிடப்பட்டது. சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை நிரம்ப தேவையான ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப் படிவத்தில் ஆதார், குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவை ஆவணங்களாக கேட்கப்பட்டுள்ளது.
அதோடு, மகளிரின் திருமண நிலை, சொந்த வீடு உள்ளவரா, வங்கி விவரம், தொழில் விவரம், அரசு ஓய்வூதியம் பெறுபவரா, நிலம், வாகனம் வைத்துள்ளீர்களா உள்ளிட்ட 13 விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. 21 வயது நிரம்பிய தகுதி உடைய மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.