சாலை போக்குவரத்தில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா... உலகத்திலேயே 2வது இடமாம்...!
01 Jul,2023
தனது பதவி காலத்தில் சாலை மற்றும் நெடுஞ்சாலை மூலம் வரும் வருவாயும் அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.தனது பதவி காலத்தில் சாலை மற்றும் நெடுஞ்சாலை மூலம் வரும் வருவாயும் அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
தனது பதவி காலத்தில் சாலை மற்றும் நெடுஞ்சாலை மூலம் வரும் வருவாயும் அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சாலை நெட்வொர்க்கில் (road network) இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் சீனாவை நம் நாடு பின்னுக்கு தள்ளியுள்ளது என்பது சிறப்பு. ஆம், சீனாவை பின்னுக்குத்தள்ளி மிகப்பெரிய சாலை நெட்வொர்க் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக நம் நாடு மாறியுள்ளது.
அதேநேரம் இதில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 1.45 லட்சம் கிமீ ரோட் கனெக்டிவிட்டியை விரிவுபடுத்தியதன் மூலம் இந்தியா 2-ஆம் இடத்தை வெற்றிகரமாக பிடித்துள்ளதாக இது தொடர்பான அறிக்கை கூறுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதிலும், கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வேஸ்ளை உருவாக்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
இந்த தீவிர நடவடிக்கைகள் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், சாலை நெட்வொர்க்கில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் தனது பதவிகால சாதனைகள் பற்றி மத்திய அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய நிதின் கட்கரி, இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாட்டின் மிக நீளமான டெல்லி - மும்பை விரைவு சாலையின் கட்டுமானப் பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக கூறினார். தான் பதவிக்கு வருவதற்கு முன் அதாவது 9 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் 91,287 கிமீ சாலை நெட்வொர்க் மட்டுமே இருந்தது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கடந்த ஏப்ரல் 2019 முதல், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) நாடு முழுவதும் சுமார் 30,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியுள்ளது, இதில் பல முக்கிய விரைவு சாலைகளும் (expressways) அடங்கும் என்றார்.
கிடைக்கும் வருவாய்
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய கட்கரி, தனது பதவி காலத்தில் சாலை மற்றும் நெடுஞ்சாலை மூலம் வரும் வருவாயும் அதிகரித்துள்ளது என்றார். 9 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4,770 கோடியாக இருந்த டோல் கலெக்ஷன் (toll collection ) தற்போது ரூ.41,342 கோடியாக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வருவாயை ரூ.71.30 லட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார். மேலும் NHAI இந்த ஆண்டு மே மாதம் 100 மணி நேரத்திற்குள் 100 கிமீ புதிய அதிவேக நெடுஞ்சாலையை உருவாக்கியது.
உத்தரபிரதேசத்தில் காசியாபாத்-அலிகார் விரைவுச்சாலை அமைக்கும் பணியின் போது இந்த வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் டோல் பிளாசாக்களில் நீண்ட வரிசைகளை குறைக்க FASTag-ன் பயன்பாடு பெரிதும் உதவுவதாகவும் குறிப்பிட்டார். தற்போது 1 வாகனம் சராசரியாக 47 வினாடிகள் சுங்கச்சாவடியில் நிற்கிறது. விரைவில் 30 வினாடிகளுக்கும் குறைவான நேரமாக இதனை குறைக்க தனது அமைச்சகம் முயற்சிப்பதாக நிதின் கட்கரி கூறினார்.