800 இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையவைத்த டிரைவர்ஸ
01 Jul,2023
அமெரிக்காவில் 800 இந்தியர்களை சட்டவிரோதமாக உள்ளே நுழைய வைத்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவில் மற்ற நாட்டினர் நுழைந்து வருவது அங்கு முக்கிய பிரச்னையாக கருதப்படுகிறது. முன்பு அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், சட்ட விரோதமாக வெளிநாட்டினர் வருவதை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் 800 இந்தியர்களை அமெரிக்காவுக்குள் டிரைவரான ராஜிந்தர் சிங் என்பவர் நுழைய வைத்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு போக்குவரத்து, தங்கும் வசதி உள்ளிட்டவைகளை அவர் செய்து கொடுத்திருக்கிறார். வாடகை கார் நிறுவனமான ஊபரின் கார்களை பயன்படுத்தி யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் ராஜிந்தர் சிங் இந்த சட்ட விரோதமான செயல்களை செய்து வந்துள்ளார்.
கடந்த ஜூலை 2018 ஆம் ஆண்டு முதல் மே 2022 ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டு கால கட்டத்தில் ராஜிந்தர் சிங் இந்தியர்களை சட்டவிரோதமாக நுழைய வைத்தா என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர்கள் ராஜிந்தருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு இறுதியில் சிக்கிய ராஜிந்தர் சிங், தான் செய்த குற்றச் செயல்களை ராஜிந்தர் சிங் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.