இந்திய கடற்படையின் முக்கிய நீர்மூழ்கி ரகங்களில் ஒன்று தான் ஜெர்மன் HDW நிறுவனம் தயாரித்த Type 209 ரக நீர்மூழ்கி கப்பல்கள் ஆகும் இவற்றை இந்திய கடற்படையில் ஷிஷூமார் ரகம் என அழைப்பர் அந்த நீர்மூழ்கி கப்பல்கள் வரிசையில் நாம் பயன்படுத்தி வரும் மூன்றாவது கப்பல் தான் INS SHALKI ஆகும்.
இந்த INS SHALKI ஷல்கி தான் இந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் நீர்மூழ்கி கப்பலாகும், இதன் பெயருக்கு அர்த்தம் நமது கடல்களில் காணப்படும் டால்ஃபின் மீன் ஆகும், பல ஆண்டுகளுக்கு முன் இந்த கப்பலை வைத்து நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான உண்மை சம்பவம் பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
பல ஆண்டுகளுக்கு முன் அரபி கடல் பகுதியில் எரு வழக்கமான ரோந்து நடவடிக்கையின் போது கடலுக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்தில் INS SHALKI ஷல்கி பயணித்து கொண்டிருந்தது அப்போது கடலின் மேற்பரப்பில் இருந்து சில ஒழுங்கீனமான சப்தங்கள் சோனார் கருவி மூலமாக தெரிய வந்தது.
இதை சோனார் ஆபரேட்டர் உடனடியாக கப்பலின் கேப்டனிடம் தெரிவிக்க அவர் உடனடியாக கப்பலை நிறுத்த உத்தரவிட்டார் மேலும் கப்பலின் மறைபுற நோக்கி Periscope கருவியை இயக்கும் ஆழத்திற்கு கொண்டு செல்லவும் மேலே சுற்றி என்ன நடக்கிறது என கண்காணிக்க உத்தரவிட்டார்.
அதன்படி சுமார் 120 அடி ஆழத்திற்கு சென்று தனது மறைபுற நோக்கி கருவியை நீருக்கு மேலே உயர்த்தி சுற்றிலும் 360 டிகிர கோணத்தில் கண்காணிக்க துவங்கியது, அப்போது அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகுகளின் கூட்டத்தில் நடுவே இருப்பதை மறைபுற நோக்கி ஆபரேட்டர் கண்டார்.
அதே நேரத்தில் ஒரு விசைப்படகில் இருந்த மீனவர்களும் மறைபுற கருவியை கண்டு ஏதோ பெரிய மீன் ஒன்றின் கண் என நினைத்து அந்த பெரிய மீனை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உடனடியாக வலை வீசினர், இதனை OOD – Officer Of the Deck எனப்படும் பொறுப்பில் உள்ள அதிகாரி கப்பலின் EXO or XO – Executive Officer எனப்படும் இரண்டாம் கட்டளை அதிகாரிக்கு தெரிவித்தார்.
மீனவர்களின் வலை மறைபுற நோக்கியை சேதப்படுத்தவும், நீர்மூழ்கி கப்பலின் Propeller எனப்படும் உந்துசூழலியிலும் சிக்கி அதை சேதப்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் அப்படி நடந்தால் நீர்மூழ்கி கப்பல் இயங்க முடியாமல் நடுக்கடலில் நின்று விடும் ஆகவே கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் உடனடியாக நீருக்கு மேலே செல்ல உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி குழுவினர் உத்தரவை பின்பற்றி நீர்மூழ்கி கப்பலை நீர் பரப்பிற்கு மேலே கொண்டு வந்தனர், அப்போது முதலில் sail எனப்படும் நீர்மூழ்கி கப்பல்களில் காணப்படும் கோபுரம் போன்ற அமைப்பு வெளிவந்தது தொடர்ந்து கப்பலின் மேல்பகுதி முழுவதும் நீருக்கு மேலே வந்தது.
நீர்மூழ்கி கப்பலின் பிரமாண்டத்தை கண்ட மீனவர்கள் மிரண்டு போய் வெலவெலத்து திகைத்து போய் நின்றனர் பின்னர் சுதாரித்து கொண்டு பயத்தில் வலைகளை அறுத்துவிட்டு படகுகளை இயக்கி அங்கிருந்து விரைந்து சென்றனர்.
ஒரு வேளை நீர்மூழ்கி கப்பல் சப்தத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணித்து இருந்தால் மீனவர்கள் ஏற்கனவே வீசியிருந்த வலைகளில் சிக்கி படகுகளை சேர்த்து இழத்து கொண்டு கடலடிக்கு சென்றிருக்கும்.
ஆனால் நீர்மூழ்கி கப்பல் சப்தத்தை கேட்டு நீருக்கு மேலே வந்ததால் மீனவர்களின் உயிர் தப்பித்தது என்பதை மறுக்க முடியாது.
இந்த கதை சந்தீப் சத்கார் அவர்களால் வெளிவந்து ஒய்வு பெற்ற கடற்படை இடைநிலை அதிகாரியான Petty Officer பெற்றி ஆஃபீஸர் மணன் பாட் அவர்கள் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.