தொழிற்சாலையில் திடீர் வாயுக்கசிவு: குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
01 May,2023
இந்திய மாநிலம் பஞ்சாபில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் வாயுக்கசிவில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பால் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில் உள்ள குளிர்விக்கும் இயந்திரத்தில் நேற்று காலை 7.15 மணியளவில் வாயு கசிந்துள்ளது.
திடீர் வாயுக் கசிவினால் ஏற்பட்ட பாதிப்பில் மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
மேலும் முழுப்பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு, பதிண்டாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தொழிற்சாலைக்கு அருகில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் மயங்கி விழுந்ததாகவும், அந்த பகுதிக்குள் யாரும் நுழைவது தற்போது பாதுகாப்பற்றதாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.