திருச்சி: நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் பலி..!
12 Mar,2023
திருச்சியில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் பலியாகினர். திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரம் அருகே நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் காரை ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் உறங்கி கொண்டிருந்த மீது கார் ஏறியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக காரை பொதுமக்கள் அடித்து உடைத்தனர். நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.