இலங்கை அகதிகள் தொடர்பில்ஸஸ விசேட கவணம் செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!
04 Mar,2023
இலங்கையிலிருந்து கடந்த 1983 ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தமழ்நாட்டில் தஞ்சமடைந்தனர், இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டம்களில் உள்ள 109 முகாம்களில் 19346 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளநிலையில் முன்னைய காலங்களில் இவர்களுக்கான உதவிகள் மந்த நிலையிலே காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021 ஆண்டிலிருந்து மு.க.ஸ்டாலின் தலமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து இலங்கை அகதிகளுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் முகமாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
அதாவது இவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசால் வழங்கப்பட்டுவந்த பணக்கொடை, கல்விக்கான உதவுதொகை, மருத்துவக் கொடுப்பனவு, துணிமணி மற்றும் பாத்திரங்கள் வழங்குவதற்கான கொடுப்பனவுகள் என்பன பண்மடங்கால் அதிகரிக்கப்பட்டதுடன், இவர்களுக்கு 7469 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதுடன் இதில் முதற்கட்டமாக 176 கோடி ரூபா செலவின் 3510 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்குப் 10 கோடியும், வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு 05 கோடியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக முகாம்களில் வாழும் அகதிகளின் தலைவர்கள் தமிழக முதல்வரிடம் நேரடியாகச் சென்று தமது நன்றியினைத் தெரிவித்ததுடன் முதல்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.