பிரபாகரனின் மனைவி - மகள் சுவிட்சர்லாந்தில். காசி ஆனந்தன் வெளியிட்ட புதிய தகவல்
19 Feb,2023
!
விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி மற்றும் துவாரகா தங்கள் குடும்பத்தை கவனிக்க சுவிட்சர்லாந்தில் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு நிதி சேர்த்ததாக கூறிய தகவல் எனக்கு வருத்தமாக இருந்தது என தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், நெடுமாறன் உறுதியாக சொல்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்துடன் பல தொடர்புகளை கொண்டு தான் இதை அறிவித்ததாக. அவர் எதையும் உறுதி செய்யாமல் சொல்ல மாட்டார் என்பது எனது நம்பிக்கை.
இந்நிலையில்,விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி மற்றும் துவாரகா தங்கள் குடும்பத்தை கவனிக்க சுவிட்சர்லாந்தில் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு நிதி சேர்த்ததாக கூறிய தகவல் எனக்கு வருத்தமாக இருந்தது.
அவர்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அவர்களை கொஞ்சி குலாவி அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று பார்த்துக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.அப்படி இருக்கையில் அவர்கள் நிதி திரட்ட வேண்டிய தேவை என்ன உள்ளது.
இதேவேளை இந்தியாவின் ஆதரவோடும், “றோ” உடைய ஆதரவுடனும் இந்த நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக கூறியது மற்றொரு குற்றச்சாட்டு. எனவே இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்பும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார்.