இந்தியாவில் 12 ஆண்டுகள் சட்டவிரோதமாக வசித்துவந்த 32 வங்காளதேசத்தினர்!
08 Feb,2023
வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்ட்டையும் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இவ்வாறு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வசித்துவரும் நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் சட்டவிரோதமாக 12 ஆண்டுகள் வசித்துவந்த வங்காளதேசத்தினரை போலீசார் நேற்று கைது செய்தனர். வங்காளதேசத்தில் இருந்து மேற்குவங்காளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஆக்ராவின் அவாஸ் விகான் காலனியில் 15 ஆண்கள், 13 பெண்கள், 4 குழந்தைகள் என 32 வங்காளதேசத்தினரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
வங்காளதேசத்த்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த அனைவரும் 12 ஆண்டுகளாக ஆக்ராவில் வசித்துவந்துள்ளனர். இவர்களிமிருந்து 35 ஆதார் அடையாள அடைகள், ஒரு பான் கார்டு கைப்பற்றப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் சிலர் எல்.ஐ.சி. ஆயுள் காப்பீட்டு திட்டமும் எடுத்துள்ளனர்.
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இவர்கள் சென்னை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்துவந்துள்ளனர். இறுதியாக ஆக்ராவுக்கு சென்றுள்ளனர். அங்கு 12 ஆண்டுகள் சட்டவிரோதமாக தங்கி வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 32 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.