13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!- இந்தியா வலியுறுத்தல்.
02 Feb,2023
இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இன்று இடம்பெற்றுவரும் 42வது உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு அமர்வில், இந்தியா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இந்திய வம்சாவளி தமிழர் உட்பட அனைத்து மக்களினதும் மனித உரிமைகளையும் உறுதி செய்யுமாறும் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.