ஆற்றில் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்!
25 Jan,2023
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் யவத் கிராம பகுதியில் உள்ள பீமா ஆற்றில் அடுத்தடுத்த இடங்களில் 4 உடல்கள் மீட்கப்பட்டன. தகவலறிந்த போலீசார் மேற்கண்ட சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று மேலும் 3 சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டன. தொடர் விசாரணையில், மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதனால் மனமுடைந்த குடும்பத்தினர் 7 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தும் இவ்வழக்கில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்