உலகிலேயே இந்தியாவில்தான் அதிக நேரம் வேலை ஆய்வில் வெளிவந்த தகவல்
10 Jan,2023
உலகிலேயே இந்தியாவில்தான் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள்...
இந்தியா, சீனா போன்ற நாடுகள் மற்ற நாடுகளை விட கணிசமாக அதிக வேலை நேரத்தைக் கொண்டுள்ளன.இந்தியா, சீனா போன்ற நாடுகள் மற்ற நாடுகளை விட கணிசமாக அதிக வேலை நேரத்தைக் கொண்டுள்ளன.
இந்தியா, சீனா போன்ற நாடுகள் மற்ற நாடுகளை விட கணிசமாக அதிக வேலை நேரத்தைக் கொண்டுள்ளன.
160 உலக நாடுகளில் வாழும் பணியாளர்களின் வேலை நேரத்தை கணக்கிட்டு வேலை நேரம் மற்றும் வேலை- வாழ்க்கை சமநிலை என்ற அட்டவணையை சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகள் மற்ற நாடுகளை விட கணிசமாக அதிக வேலை நேரத்தைக் கொண்டுள்ளன.
அதேநேரம் , பிரேசில் போன்ற நாடுகளில் 1970 களில் இருந்த வேலை நேரத்தை ஒப்பிட்டால் மிக குறைந்த அளவிலேயே இருப்பதாக தரவுகள் காட்டுகின்றன. உலகளவில், 2019 ஆம் ஆண்டில், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் (49.1 மணிநேரம்), போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு (48.2 மணிநேரம்) மற்றும் உற்பத்தி (47.6 மணிநேரம்) ஆகிய துறைகள் ஒவ்வொரு வாரமும் சராசரியாக அதிக நேரம் வேலை வாங்கும் தொழில்களாக உள்ளன.
இதற்கு நேர்மாறாக, விவசாயத் தொழிலாளர்கள் (37.9 மணி நேரம்), கல்வி (39.3 மணி நேரம்) மற்றும் சுகாதார சேவைகள் (39.8 மணி நேரம்) என தொழிலாளர்கள் வாரத்திற்கு சராசரியாக குறைந்த மணி நேரம் வேலை செய்தனர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால் சுகாதார பணியாளர்கள் பணி நேரம் என்பது 2019 க்கு பின் பரவிய கொரோனா தொற்றால் 2019 - ஐ விட அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.