இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ஏர்இந்தியா
28 Dec,2022
அனைத்து பயணிகளும் விமான நிலையத்திலும், பயணத்தின் போதும் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து நுழைவு பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: சீனாவில் ஒமைக்ரானின் புதிய திரிபான பி.எப்.7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா,
ஆங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடக்கிறது. சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
அனைத்து பயணிகளும் விமான நிலையத்திலும், பயணத்தின் போதும் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து நுழைவு பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும். அதே நேரத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரேண்டம் பரிசோதனை தேவையில்லை என்றும் அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.