ரோந்து பணிகளுக்கு பயன்படுத்த இலங்கைக்கு 125 வாகனங்களை வழங்கியது இந்தியா!
24 Dec,2022
இலங்கையில், பொலிஸ் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்த 125 வாகனங்களை இந்தியா வழங்கி உதவியுள்ளது.
இது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் தொடரும்.
இலங்கை பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் திராண் அலஸ்ஸிடம் பொலிஸ் துறை ரோந்து பயன்பாட்டுக்காக 125 வாகனங்களை இந்தியா சார்பாக தூதர் கோபால் பாக்ளே ஒப்படைத்தார்.
உறுதி அளிக்கப்பட்ட 500 வாகனங்களில் மீதமுள்ள 375 வாகனங்களும் விரைவில் ஒப்படைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.