சிறுநீரக கட்டி நிவாரண சிகிச்சை
21 Jan,2026
இன்றைய திகதியில் எம்மில் பலரும் நாளாந்தம் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அலுவலகம் மற்றும் வீட்டை பாரிய அளவில் பாவிப்பதால் பருகும் தண்ணீரின் அளவை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக எம்முடைய சிறுநீரகங்களின் இயக்கத்தில் தேக்க நிலையோ அல்லது முழுவதுமாக இயங்க இயலாத நிலையோ உருவாவதுடன் அங்கு கட்டிகள் தோன்றவும் வாய்ப்பு உண்டாகிறது.
இத்தகைய தருணத்தில் வேறு உடல் பாதிப்பிற்காக ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளும் போது இத்தகைய சிறுநீரக கட்டிகளை வைத்திய நிபுணர்கள் அவதானித்து நோயாளிகளிடம் எடுத்துரைக்கிறார்கள்.
இதன் பிறகு இதற்கு இத்தகைய பாதிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சிறுநீர் வெளியேறும் போது அதில் நிறமாற்றம், வெளியேறும் சிறுநீரில் மிகச் சிறிதளவு குருதியும் வெளியேறுதல், இடுப்பு வலி, சோர்வு , திடீர் எடை இழப்பு, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்... உடனடியாக வைத்தியர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய பரிசோதனைகள் உங்களுடைய சிறுநீரகத்தில் ஏதேனும் கட்டி பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. அதனை துல்லியமாக அவதானிக்க இயலும்.
மேலும் பலருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தாமல் உருவாகும் இத்தகைய சிறுநீரக கட்டிகளை வைத்தியர்கள் துல்லியமாக அவதானித்து அவற்றின் அளவு நான்கு செ.மீ அளவிற்குள் இருந்தால்.. அதனை பகுதியளவு சிறுநீரக அகற்றும் நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்டு சிறுநீரக கட்டியை அகற்றி முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
சிலருக்கு கட்டியின் அளவு அதிகமாக இருந்தால்.. இரண்டு ஆண்டுகள் வரை டயாலிசிஸ் எனப்படும் நிவாரண சிகிச்சையை வழங்கி, அதன் பிறகு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்து இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.