பைலோனெஃப்ரிடிஸ் சிறுநீரக தொற்று சிகிச்சை
07 Jan,2026
எம்முடைய பிள்ளைகள் திடீரென்று வயிற்று வலி என விவரிப்பார்கள். இதில் சிலருக்கு மாலை வேளையானதும் குளிர் காய்ச்சலும் ஏற்பட தொடங்கும். இத்தகைய அறிகுறிகள் அவர்களுக்கு பைலோனெஃப்ரிடீஸ் எனப்படும் சிறுநீரகத்தொற்று பாதிப்பிற்கு ஆளாகி இருக்கலாம் என அவதானித்து, உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு திடீர் என்று சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும். அதிலும் குறிப்பாக இரண்டு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு காய்ச்சல், வாந்தி, பேதி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்... அவர்களுக்கு சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். சிறுநீர் பையில் இருந்து சிறுநீரை எடுத்து செல்லும் குழாய்களில் பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அந்த குழாயின் அளவு வீக்கம் அடைந்து விரிவடைகிறது. இது சிறுநீர்ப்பை செயலிழப்பு, சிறுநீர்ப்பை அடைப்பு , அப்பகுதியில் உள்ள நரம்பியல் செயல்பாட்டில் இடையூறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இத்தகைய பாதிப்பிற்கு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து சிகிச்சை பெற வேண்டும். இத்தகைய தருணங்களில் பாக்டீரியாக்களை அகற்றுவதற்காக எம்முடைய சிறுநீரகங்கள் அதிக அளவிலான சிறுநீரை உற்பத்தி செய்யும். இது பிள்ளைகளின் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுப்பதுடன் நாட்பட்ட சிறுநீர் தொற்று பாதிப்பிற்கும் காரணமாகிவிடும். இதனால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட உடன் முறையான மற்றும் முழுமையான சிகிச்சையை பெற வேண்டியது இருக்கும். இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர்