பயாப்சி எனும் உடலில் கட்டிகள் பாதிப்பு வைத்திய பரிசோதனை ?
23 Dec,2025
எம்மில் பலருக்கு உடலில் கட்டிகள் பாதிப்பு ஏற்பட்டால் வைத்தியரை சந்திக்கும்போது அவர்கள் பயாப்ஸி எனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வார்கள்.
பயாப்ஸி என்பது திசு பரிசோதனை என அறியலாம். இந்த பரிசோதனை ஏன் மேற்கொள்ளப்படுகிறது? என்பது குறித்து வைத்திய நிபுணர்கள் மற்றும் நோய் பற்றி ஆராயும் ஆய்வாளர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
மருத்துவ மொழியில் ஹிஸ்டோபேதாலஜி என குறிப்பிடப்படும் இந்த மருத்துவ தொழில் நுட்ப வல்லுநர்கள், தொற்றால் பாதிக்கப்பட்ட திசுக்களை பிரத்யேகமான நுண்ணோக்கி மற்றும் நவீன மருத்துவ தொழில்நுட்ப மூலம் கண்டறிகிறார்கள்.
இந்த பரிசோதனையில் தொற்று பாதிப்புக்களுடன் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் குவிப்பு உள்ளிட்ட ஏராளமான விடயங்களை துல்லியமாக அவதானிக்க இயலும்.
குறிப்பாக உடலில் புற்றுநோய் எந்த உறுப்பில் ஏற்பட்டிருந்தாலும் அதன் நிலை- தீவிரம்- பரவல்- என பல விடயங்களை இத்தகைய பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்.
பொதுவாக இத்தகைய பரிசோதனை வைத்திய சாலையில் உள்ள பிரத்யேக ஆய்வகத்தில் நோயியல் நிபுணர் ஒருவரால் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பரிசோதனையில் திசுக்களை பிரித்து, அதில் பிரத்யேக ரசாயனங்களை செலுத்தி, செல்களை பகுப்பாய்வார்கள். இந்நிலையில் நவீன நுண்ணோக்கி மூலம் தனிப்பட்ட செல்களை துல்லியமாக பார்வையிடும் சைட்டோபேதாலஜி என்பது வேறு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
ஹிஸ்டோபேதாலஜி நிபுணரின் பங்களிப்பு இல்லாமல் நோயினை கண்டறிவதும், அதன் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதும் சாத்தியமற்றது. குறிப்பாக புற்றுநோய் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கவும், சத்திர சிகிச்சைக்கு பிறகும், முன்னரும் இத்தகைய நிபுணர்களின் ஆய்வு அறிக்கை அவசியம்.
பெரும்பாலும் தற்போதைய நவீன தொழில் நுட்பமாக கருதப்படும் எண்டோஸ்கோபி , கொலோனோஸ்கோபி, கோல்போஸ்கோபி ஆகிய கருவிகளில் ஊடாக திசுக்கள் பெறப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.