வயதானவர்களுக்கு இரத்தக்குழாய் அடைப்பை நீக்கும் சிகிச்சை
26 Nov,2025
இன்றைய சூழலில் எம்முடைய வீடுகளில் உள்ள எழுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு ஏதேனும் இதய ரத்த நாளங்களில் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டால்.. அவர்களின் வயதினை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில அசௌகரியங்களை கருத்தில் கொண்டும், சத்திர சிகிச்சைக்கு பலரும் தயங்குவார்கள்.
இந்நிலையில் தற்போது இத்தகைய வயதானவர்களுக்கு ஏற்படும் இரத்த குழாய் அடைப்பை துல்லியமாக அவதானித்து சீரமைக்க பிரத்யேக சிகிச்சை முறை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
வயதானவர்களுக்கு இதயத்தில் உள்ள ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால்.. வைத்திய நிபுணர்கள் உடனடியாக சத்திர சிகிச்சைக்கு பரிந்துரைப்பதில்லை.
ஆனால் தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள ஓப்டிகல் கோஹெரன்ஸ் டொமோகிராபி எனப்படும் கருவியின் மூலமாக இதயத்தில் உள்ள ரத்த குழாய் அடைப்புகள் மீது பிரத்யேக ஒளியினை செலுத்தி.. அதாவது அக சிவப்பு கதிரொளியை செலுத்தி.. பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர்.
இந்த கருவி தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இத்தகைய பாதிப்பிற்கான நிவாரணத்தை முழுமையாக வழங்க இயலும். இவர்களுக்கு ஓஞ்சியோ பைபர்கேசன் ஸ்டென்டிங் எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் நிவாரணத்தை அளிக்கலாம்.