இடுப்பு மாற்று சத்திர சிகிச்சை நவீன தொழில்நுட்பம்
15 Nov,2025
இன்றைய சூழலிலும் எம்முடைய தெற்காசிய நாட்டினர் அனைவரும் பசியாறும் தருணங்களில் தரையில் அமர்ந்து சம்மணமிட்டு பசியாறுவதை பார்க்கிறோம். அதே அத்துடன் கழிப்பறையை பாவிக்கும் போதும் மேலத்தேய நாகரீக கழிப்பறை கருவியை பயன்படுத்தாமல்.. இந்திய பாணியிலான கழிப்பறையை தான் பாவிக்கிறோம்.
மேலும் எம்முடைய இயக்கங்களுக்கு இடுப்பு மூட்டுகளின் செயல்பாடு சீராக இயல்பான நிலையில் இயங்கும் வரை அதன் அருமையையும், முக்கியத்துவத்தையும் நாம் உணர்வதில்லை.
சில தருணங்களில் சிலருக்கு இடுப்பு வலி ஏற்பட்டு, அவை தாங்க இயலாத வலியாக அதிகரித்தால் வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய நிபுணர்களை சந்தித்து அவர்கள் மேற்கொள்ள பரிந்துரைக்கும் சத்திர சிகிச்சைக்கு தயக்கத்துடனும், அச்சத்துடனும் சம்மதம் தெரிவிக்கிறோம்.
ஆனால் இது போன்ற நுட்பமான இடுப்பு மாற்று சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் அதிகரிப்பதற்காக தற்போது எம் ஐ எஸ் எனப்படும் நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகி நோயாளிகளுக்கு பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இடுப்பு மூட்டு என்பது அளவில் பெரியதான மூட்டு. அது எம்முடைய ஈர்ப்பு மையத்திற்கு அருகில் அமைய பெற்றுள்ளது. மேலும் நாளாந்த சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு வலியற்ற இடுப்பின் இயக்கம் அவசியமாகிறது.
இந்நிலையில் தடிமனான தசையடுக்குகளால் மூடப்பட்டிருக்கும் இடுப்பு பகுதியில் கடந்த தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மூலம் சிகிச்சை மேற்கொள்ளும் போது ரத்தப்போக்கு இயல்பான அளவைவிட கூடுதலாக இருக்கும்.
அத்துடன் சத்திர சிகிச்சைக்கு பிறகான மீட்பு என்பது தாமதம் ஆகலாம். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் எம் ஐ எஸ் எனும் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் இடுப்பு மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் போது.. குறைந்தபட்சமாக ஊடுருவி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக இடுப்பு பகுதியில் வலிமையாக உள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு அதிக அளவில் சேதம் ஏற்படுவதில்லை. மிக மிக குறைந்தபட்ச அளவிலான சேதம் உண்டாகிறது.
இதன் காரணமாக இத்தகைய சத்திர சிகிச்சை நிறைவடைந்த குறுகிய கால அவகாசத்திற்குள் சத்திர சிகிச்சை மேற்கொண்ட நோயாளி ஏனைய தெற்காசிய நாட்டவர்களை போல் தரையில் அமர இயலும்.
இந்திய பாணியிலான கழிப்பறையை பாவிக்க இயலும் மற்றும் ஏனைய நாளாந்த செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்ள இயலும். மேலும் இத்தகைய தொழில்நுட்பத்தில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால் தசைகள், தசை நார்கள் ஆகியவை பாதுகாக்கப்படுகிறது