பார்வை திறன் குறைகான நவீன சிகிச்சை
21 Jan,2025
இன்றைய திகதியில் எம்மில் பலரும் நாற்பது வயதை கடந்து விட்டால் அவர்களின் பார்வை திறனில் மாற்றம் ஏற்படக்கூடும். அதிலும் தற்போதைய சூழலில் டிஜிட்டல் திரையை பார்வையிடும் நேரம் நாளாந்தம் அதிகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக பார்வை திறனில் மாற்றம் ஏற்படுவது இயல்பானதாகி விடுகிறது.
இதுபோன்ற பார்வை திறன் குறைபாட்டை சீராக்குவதற்கு தற்போது பிரஸ்பியோண்ட் எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது என கண் வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பொதுவாக கைபேசியில் இடம்பெற்றிருக்கும் செய்தியை வாசிப்பதற்கு ஏற்படும் பார்வை தடுமாற்றம், பார்வையில் மங்கலான தன்மை, புத்தகம் அல்லது டிஜிட்டல் திரையை வாசித்த பிறகு கண்களில் சோர்வு அல்லது தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுடைய பார்வைத் திறனில் குறைபாடு ஏற்பட்டு இருப்பதை அவதானிக்கலாம்.
இதுபோன்ற தருணங்களில் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று பார்வை திறன் குறித்த பிரத்யேக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்தத் தருணத்தில் வைத்திய நிபுணர்கள் சில பரிசோதனைகளை மேற்கொண்டு உங்களுடைய பார்வை திறனில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை துல்லியமாக அவதானிப்பார்கள்.
அதன் பிறகு பிரஸ்பியோண்ட் எனும் நவீன சிகிச்சை மூலம் உங்களுடைய பார்வை திறனை மேம்படுத்துவார்கள். இந்தத் தருணத்தில் உங்களுடைய கருவிழி , விழித்திரை ஆகிய பகுதிகளில் முதுமையின் காரணமாக ஏற்பட்டிருக்கும் தசை சோர்வை கண்டறிந்து அதனை மீண்டும் சீரமைப்பார்கள்.
அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் அளிப்பார்கள். இத்தகைய பிரத்யேக சிகிச்சைக்குப் பிறகு உங்களுடைய பார்வைத் திறனில் மேம்பாடு ஏற்படுவதை காணலாம். மேலும் இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு கண் வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் பரிந்துரையை ஏற்றுக்கொண்டால் உங்களுடைய டிஜிட்டல் திரை மற்றும் புத்தகங்களை, செய்திகளை எந்தவித தடையும் இல்லாமல் வாசிக்கலாம். அருகில் உள்ள பொருட்களையும் காணலாம்