சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக மாற்று சிகிச்சை
15 Dec,2024
எம்மில் சிலருக்கு மூளை தொடர்பான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது...சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படக்கூடும். இதுபோன்ற தருணங்களில் நோயாளிகளுக்கு சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க தொடர் சிறுநீரக மாற்று சிகிச்சை ( Continuous Renal Replacement Therapy - CRRT) எனப்படும் நவீன சிகிச்சை பலன் அளிப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் சிலருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பர். இவர்களுக்கு நோய் தொற்று பாதிப்புடன் சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல் தொடர்பான வேறு சில உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இந்த தருணத்தில் சிறுநீரகத்தின் பணிகளிலும் பாதிப்பு உண்டாகும்.
அதனை சீரமைக்க ஹீமோடயாலிசிஸ் எனப்படும் ஒரு வகையினதான சிகிச்சையை வைத்திய நிபுணர்கள் பரிந்துரைப்பர். அதிலும் குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இத்தகைய நோயாளிகளுக்கு தொடர் சிறுநீரக மாற்று சிகிச்சை எனும் டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள்.
இத்தகைய சிகிச்சையின் போது உங்களுடைய உடலில் சிறுநீரகங்கள் செய்யும் சுத்திகரிப்பு பணியை இத்தகைய விசேட கருவி மேற்கொள்கிறது. பொதுவாக டயாலிசிஸ் எனப்படும் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சையை எம்மில் பலரும் சிறுநீரக செயலிழப்பு பாதிப்பின் காரணமாக வாரத்திற்கு மூன்று முறை அல்லது நான்கு முறை தொடர்ச்சியாக மூன்று மணி தியாலம் வரை மேற்கொள்வார்கள்.
ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டால்.. ரத்த அழுத்தம் இயல்பான அளவை விட குறைந்து, உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனை தவிர்ப்பதற்காக வைத்தியர்கள் தொடர் சிறுநீரக மாற்று சிகிச்சை எனும் டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
இந்தத் தருணத்தில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு தொடர்ந்து 24 மணி நேரமோ அல்லது தொடர்ந்து 48 மணி நேரமோ சிறுநீரகம் செய்யும் பணிகளை மேற்கொள்வதற்கான டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்வார்கள். பொதுவாக மூளை பகுதியில் சத்திர சிகிச்சை மேற்கொள்பவர்கள், நுரையீரல், இதயம், சிறுநீரகம் ஆகிய பாதிப்புடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள்.. தற்காலிக சிறுநீரக பாதிப்பிற்கு ஆளாகி இருப்பவர்கள்.. ஆகியோர்களுக்கு அவர்களின் ரத்த அழுத்த நிலையை கருத்தில் கொண்டு தொடர் சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்