சர்க்கரை நோய் சீனாவின் சாதனைமுயற்சி ?
14 Nov,2024
சமீபத்தில், சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சியில் சீனா முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை ‘சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும்; ஆனால், குணப்படுத்த முடியாது’ என்று இருந்த நிலைமையை சீனா மாற்றிக்காட்டியுள்ளது. அதாவது, ‘ஸ்டெம் செல் சிகிச்சை’ (Stem Cell Therapy) மூலம் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்று இதுவரை விலங்கினங்களில் மட்டுமே உறுதிசெய்யப்பட்டிருந்த ஆய்வை முதன்முறையாக மனிதர்களிடம் மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளது. இது சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் இந்தச் சாதனைதான் இப்போது உலகளாவிய மருத்துவர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.