கல்லீரல் அழுத்த பாதிப்புக்கான சிகிச்சை
                  
                     24 Sep,2024
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	எம்மில் சிலருக்கு தொடர்ச்சியாக மது அருந்துவதால் அவர்களுடைய கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
	 
	இவர்களுக்கு சில தருணங்களில் குமட்டல் ஏற்படும். இந்த குமட்டல் அவர்களுடைய கல்லீரல் அழுத்த பாதிப்பிற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.
	 
	இவர்கள் உடனடியாக இதனை அலட்சியப்படுத்தாமல் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
	 
	இத்தகைய பாதிப்பிற்கு அவர்கள் குருதி பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்திருப்பார்கள். அந்த ரத்த பரிசோதனையில் ட்ரான்ஸ்மினிடிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டால் உங்களுடைய கல்லீரல் அழுத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என உறுதிப்படுத்துவார்கள்.
	 
	மேலும் இத்தகைய முடிவுகள் உங்களது கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், கல்லீரலில் திசுக்கள் சேதமடைந்திருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்துவதாகவும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
	 
	மேலும் டிரான்ஸ்மினிடிஸ் என்றால் உங்களுடைய குருதியில் இயல்பான அளவை விட கூடுதலாக கல்லீரலில் இருந்து உற்பத்தியாகும் என்சைம்கள் எனப்படும் நொதிகள் இருக்கிறது என பொருள்.
	 
	இந்த நொதிகள் கல்லீரலில் இருந்து உங்களுடைய குருதியில் கலக்கிறது. மேலும் இதனை அலனைன் ட்ரான்ஸ்மினேஸ் மற்றும் அஸ்பார்டேட் ட்ரான்ஸ்மினேஸ் என வகைப்படுத்தப்படுத்துவார்கள்.
	 
	உங்களுடைய கல்லீரலில் உள்ள திசுக்களின் இருக்கும் செல்கள் சேதம் அடையும் போது இத்தகைய ட்ரான்ஸ்மினிடிஸ் உண்டாகிறது.
	 
	வைத்தியர்கள் இத்தகைய குருதி பரிசோதனையின் போது கல்லீரல் பாதிப்பு எத்தகைய தன்மையது என்பதனையும், அதன் வீரியத்தையும் துல்லியமாக அவதானிக்கிறார்கள்.
	 
	அத்துடன் ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பின் தீவிரத்தையும் இதனூடாக கண்டறிவார்கள். மேலும் இதன் மூலம் கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் பல வகையிலான நோய்க்குறிகளையும் வைத்தியர்கள் கண்டறிவார்கள்.
	 
	இதனைத் தொடர்ந்து இதற்கு நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
	 
	அத்துடன் அவர்கள் வழங்கும் அறிவுரைகளையும் குறிப்பாக கல்லீரலின் இயங்கு திறனை பாதிக்கும் உணவு முறையை கட்டுப்படுத்துவதற்கான விடயங்களை அவர்கள் பரிந்துரைப்பார்கள்.
	 
	அதனை உறுதியாக கடைப்பிடித்தால் இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.