இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பை அகற்றும் நவீன சத்திர சிகிச்சை
20 Sep,2024
எம்மில் சிலர் அவர்களுடைய குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு இதயத்தில் ரத்த நாள அடைப்பு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது என்றும், இதற்காக அவர்களுக்கு ஒஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பாதிப்பினை அகற்றுவதற்கான உடற் தகுதி இல்லை என்றும் வைத்திய நிபுணர்களிடம் எடுத்துரைப்பர். இந்த நிலையில் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு படிவு அதிகமாக படிந்து, அவை கால்சியம் சத்து கொண்ட படிமங்களாக படிந்திருக்கும். இதனை அகற்றுவதற்கு தற்போது அர்பிற்றல் அதெரெக்டோமி எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலன் அளிக்கிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
வயதில் மூத்தவர்களுக்கு இதய ரத்த நாளத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப்புகள் ஏற்பட்டிருந்தால்... அதனை ஒஞ்சியோகிராம் மற்றும் ஒஞ்சியோ பிளாஸ்ரி எனும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவதில் பாரிய அசௌகரியம் ஏற்படக்கூடும். ஏனெனில் இத்தகைய ரத்த குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புகள்... செல்களின் இறப்பினால் கால்சிய படிமங்களாக படிந்திருக்கும். இதனை சில சத்திர சிகிச்சைகள் மூலம் அகற்றுவது முழுமையான பலன்களை தருவதில்லை.
மேலும் முதுமை அடைந்தவர்களுக்கு அவர்களுடைய ரத்த நாளத்தில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... அவர்களுக்கு நவீன சத்திர சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்த தருணத்தில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அர்ப்பிற்றல் அதெரெக்டோமி எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலனை வழங்கி வருகிறது. இத்தகைய சிகிச்சை தற்போது தெற்காசிய நாடுகளிலுப் அறிமுகமாகி இருக்கிறது.
இதன் போது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் நாட்பட்ட கால்சிய மற்றும் கொழுப்பு படிமங்களை எளிதாக அகற்றி விட முடியும். அதனைத் தொடர்ந்து பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் இதய நாளத்தை சீரமைத்து இதயத்தை ஆரோக்கியமாக இயங்க வைக்க இயலும்.