வயகரா ஆய்வில் வெளியான புதிய தகவல்.
12 Jun,2024
சில்தெனாபில் (Sildenafil) என்ற ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான வயகரா மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வயாகரா உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த நாளங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் தளர்வதால் மனித மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் வாஸ்குலார் டிமென்ஷியா (Vascular Dementia) என்று கூறப்படும் நியாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்றும் நியாபக மறதிக்கு வயகரா சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தில் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் நியாபக மறதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வயாகரா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நியாபக மறதி மருத்துவத்தில் இது ஒரு திருப்புமுனை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.