.
எந்த நோயாக இருந்தாலும் அதன் ஆரம்ப அறிகுறிகளைக் கொண்டு நோயறிதல் பரிசோதனை செய்து பார்த்தால் அதன் பாதிப்பைத் தவிர்க்க முடியும். புற்றுநோயும் அவ்வாறான ஒரு நோய்தான்!
புற்றுநோய் என்பது ஒரு உயிர்கொல்லி நோய் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான புற்றுநோய் வகைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்தக்கூடியவையே!
என்றாலும் அவ்வறிகுறிகளை கவனிக்காது விடுவதாலும் அவற்றை வைத்தியரிடம் கொண்டு செல்லாததாலுமே கடுமையான தாக்கங்களை - சிலவேளைகளில் உயிரிழப்பைக் கூட - உருவாக்கி விடுகிறது.
எனவே, பின்வரும் சில உடலியல் மாற்றங்களை புற்றுநோய்க்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம். இவற்றில் ஏதாவது மூன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருப்பின், உடனடியாக வைத்தியர் ஒருவரது ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.
அறிகுறிகள்:
கணையம், வயிறு, உணவுக்குழாய் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயின் முதல் அறிகுறி, உடல் நிறை குறைவதே. எனவே, திடீரென, ஏதும் காரணமே இல்லாமல் உடல் நிறை குறைந்தால் வைத்திய ஆலோசனை பெறுங்கள்.
இரத்தப் புற்றுநோய் மற்றும் நிணநீர் புற்றுநோய் போன்ற வகைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அடிக்கடி காய்ச்சல் வரும். சளி, தடிமன் போன்ற காரணங்கள் இன்றி காய்ச்சல் அடிக்கடி ஏற்பட்டால் வைத்தியரைப் பாருங்கள்.
லுகேமியா மற்றும் பெருங்குடல், வயிறு சார்ந்த உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயால் இரத்த இழப்பு ஏற்படலாம். ஆனால், அது வெளியே தெரியாது. இவ்வாறு இரத்தம் இழக்கப்படுவதால் தீராத உடல் சோர்வு ஏற்படும். இதுவும் வைத்திய ஆலோசனைக்கு கொண்டு செல்லப்படவேண்டியதே!
சில வகைப் புற்றுநோய்கள் - குறிப்பாக, சருமப் புற்றுநோய்க்கு ஆளாகும் ஒருவரது தோல் திடீரென கருமையாகத் தொடங்கும். தோல், கண்கள் என்பன மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களைப் போல மஞ்சள் நிறமாக மாறும். சருமத்தில் தடிப்புகள், அரிப்பு என்பனவும் அதிக உரோம வளர்ச்சியையும் காட்டும். இவ்வறிகுறிகள் குறித்தும் கவனமாக இருங்கள்.
உடலிலோ, வாயிலோ நான்கு வாரங்களுக்கு மேலாகியும் ஆறாத புண்கள் ஏதும் இருந்தால் அது புற்றுநோயாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல, ஆணுறுப்பில் அல்லது பெண்ணுறுப்பில் தோன்றும் தொற்று அல்லது புண்களும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால், தகுந்த வைத்தியரை நாடுவது நல்லது.
வாய், மலம், சிறுநீர், பெண்களின் முலைக் காம்பு போன்ற உறுப்புகளில் இருந்து இரத்தம் வெளியேறுவதும் மாதவிலக்கின்போது அசாதாரண இரத்தம் வெளியேறுவதும் கூட புற்றுநோயின் அறிகுறியே. இவை, உடனடியாக வைத்தியரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படவேண்டியது அவசியம்.
தொடர்ச்சியாக, மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் மற்றும் தொண்டையில் கரகரப்பு, உணவை விழுங்குவதில் சிக்கல் அல்லது தொடர்ச்சியாக உணவு சீரணமாகாமை போன்றன இருந்தால், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
எனவே, மேலே தரப்பட்ட ஏதேனும் காரணிகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உரிய வைத்திய நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம்.
ஒருவேளை புற்றுநோய் இல்லை என்று தெரிந்துகொண்டாலும் மகிழ்ச்சிதானே!
புற்றுநோய்க்கு மருந்தாகுமா தேன்?
.
இந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களில் மிக முக்கியமானது புற்றுநோய் ஆகும். இருப்பினும் புற்றுநோய் என்றாலே மரணம் என்று நினைத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. மருத்துவத்தின் வளர்ச்சியால் புற்றுநோயைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் பூரணமாகக் குணப்படுத்தி விடலாம்.
இந்நிலையில், பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார். தேன் கூட்டை கட்டுவதற்கு தேனீக்கள் ஒரு விதமான பிசினை பயன்படுத்துவதாகவும் இந்த பிசின் தேனீயின் கொடுக்கில் உள்ள விஷம் என்றும், அது ஆபத்து இல்லாதது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிக்கு தேன் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், புற்றுநோயின் தாக்கம் எலிக்கு குறைந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து புற்றுநோயை தேன் குணப்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்ற பழமொழிக்கு ஏற்ப நம்பப்படும் மற்றொரு வாசகம் ‘தேனை விட சிறந்த மாமருந்து இவ்வுலகில் உண்டோ’ என்பதுதான்.
தேன் என்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதங்களுள் ஒன்று. பழங்காலத்தில் இருந்தே தேன் நம்முடைய உணவு முறைகளில் கலந்து உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அந்த வகையில், இன்று தேன் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.