இரவில் தெரியும் இந்த 6 அறிகுறிகள்.. உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதை காட்டும்
08 Nov,2023
சிறுநீரகம் என்பது நமது உடலில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு உறுப்பு. நம் உடலில் இருக்கும் நச்சு கழிவுகளை அகற்றி, இன்சுலின் அளவுகளை பராமரிப்பது போன்ற எண்ணற்ற வேலைகளை சிறுநீரகங்கள் செய்கின்றன.
எனினும் தற்போதைய உடல் செயல்பாடு குறைக்கப்பட்ட உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாக பல நபர்களுக்கு சிறுநீரக சேதம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. ஆயினும் இதுபோன்ற நோய்கள் குறித்த அறிகுறிகளை நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
எந்த ஒரு நோயையும் ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது அந்த நோயின் தீவிரத்தை குறைக்க உதவும் என்பது சிறுநீரக நோய்களுக்கும் பொருந்தும். அதிலும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடலானது இரவு நேரத்தில் ஒரு சில அறிகுறிகளை
அடிக்கடி சிறுநீர் கழித்தல்: இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்காக அடிக்கடி படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவது சிறுநீரக கோளாறுகள் இருப்பதை குறிக்கிறது. இரவு நேரத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட முறை சிறுநீர் கழிப்பதற்காக எழுந்திருப்பது இதில் அடங்கும். எனவே ஒருவரது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் குறிப்பாக இரவு நேரத்தில் ஏதேனும்
தூக்கமின்மை: நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பெரும்பாலானவர்களில் தூக்க கோளாறுகள் இருப்பது பொதுவான ஒன்று.
இரவு மற்றும் பகல் தலைகீழ் மாற்றம்: நாம் தூங்குவது மற்றும் விழித்திருப்பதை கட்டுப்படுத்துவதற்கு நமது உடலில் மெலடோனின் என்ற ஹார்மோன் இருக்கிறது. ஆரோக்கியமான நபர்களில் இந்த ஹார்மோன் அளவுகள் பகல் நேரத்தில் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிகமாகவும் இருக்கும். இதுவே சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களில் மெலடோனின் அளவுகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைவாக இருப்பதால் அது தூக்க கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம்: டிஸ்பினியா (Dyspnea) என்பது சிறுநீரக நோய்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். திரவங்களை சரியான முறையில் சிறுநீரகங்களால் கையாள முடியாத போது இது ஏற்படுகிறது. பெரும்பாலும் படுத்திருக்கும் பொழுது உடலின் கீழ்பாக்கங்களிலிருந்து நுரையீரலுக்கு ரத்தம் மறு பங்கீடு செய்யப்படுவதால் அசவுகரியம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது.
ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்: அடிக்கடி கால்களை அசைத்துக் கொண்டிருக்க வேண்டிய ஒரு அவசரத்தை இந்த நிலை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் இது ஊசி குத்துவது அல்லது அரிப்பு போன்ற அசௌகரியமான உணர்வை ஏற்படுத்துகிறது. பொதுவாக இது மாலை அல்லது இரவு நேரங்களில் தீவிரமாகலாம்.
கால்களில் வீக்கம்: கால்களில் வீக்கம் ஏற்படும் அறிகுறி உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலும் சிறுநீரக நோய்கள் காரணமாக ஏற்படக்கூடிய வீக்கம் என்பது இரவு நேரங்களில் மோசமாகி காலை நேரத்தில் சற்று குறைவாக காணப்படும். இது நாள்பட்ட சிறுநீரக கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஏற்படலாம். இதனை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது சிறுநீரக நோய்கள் தீவிரமடைவதை தவிர்க்க உதவும்.
எனவே உங்களது விலைமதிப்பில்லாத சிறுநீரகங்களை பாதுகாக்க அது குறித்த கட்டு கதைகளில் இருந்து விலகி இருந்து சிறுநீரக நோய்கள் குறித்த உண்மையான அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.