தொண்டை தொற்று – தீர்வு!

30 Sep,2023
 

 
 
 
தொண்டை தொற்று என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொதுவானது. தொண்டை கரகரப்பு போன்ற தொற்று ஒரு நெருடலான வலி, பாதிப்பு நிலையை ஏற்படுத்தும். தொண்டை தொற்று பாதிப்பு ஏற்படும் போது, விழுங்குவதில் சிரமம் ஏற்படும். எந்த பருவ காலத்திலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். அதேபோன்று எந்த நேரமும், எந்த காலமும் ஏற்படலாம். குழந்தைகள் மற்றும் வளர்பருவத்தினர் தொண்டை தொற்று பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். இந்த தொண்டை தொற்று ஏற்படும் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் வழிகளையும் பார்ப்போம்.
 
தொண்டை வலி தொற்று அல்லது டான்சிலை டிஸ் என்றும் கூறப்படுகிறது. மூக்கு – வாய்க்கு பின்னால் உள்ள குழிப் பகுதியான பாரின்க்ஸ் அல்லது டான்சிலை சுற்றியுள்ள பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக, தொண்டை தொற்று, வைரஸ் கிருமிகள் அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது. ப்ளூ அல்லது சுரப்பி சார்ந்த பரவலான சுகவீனத்தின் அறிகுறியாகவும் இது உள்ளது.
 
தொண்டை வலி தொற்று பெரும்பாலும், குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் இடையில் அதிகளவில் காணப்பட்டாலும், அனைத்துத் தரப்பினரையும் இது பாதிக்கிறது. இந்த தொற்றின் முக்கிய அறிகுறி, தொண்டை வலி மற்றும் விழுங்குவதில் சிரமம் ஆகும்.
 
தொண்டை தொற்றுக்கான காரணங்கள்
 
தொண்டை வலிக்கு ஸ்டப்டோகாகஸ் மற்றும் அர்கனோ பாக்டீரியம், ஹீமோ லைடிகம் என்ற இரண்டு பொதுவான பாக்டீரியாக்கள் காரணமாக இருக்கின்றன. மேலும், ஆன்டிபயாடிக்ஸ் எடுத்துக் கொள்வது, கீமோதெரபி அல்லது நோய்எதிர்ப்பு மருந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் தொண்டை வலி காணப்படலாம்.
 
பொதுவாக வைரஸ்கள் ப்ளூ
 
போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இதனால் தொண்டை வலியையும் ஏற்படுத்துகிறது. சில வைரஸ்கள் வாய்ப்பகுதி மற்றும் தொண்டைப்பகுதிகளில் கொப்புளங்களை ஏற்படுத்துகின்றன. வாய் வழியாக உணவு உண்ணும் பொழுது தொண்டையில் வறட்சி ஏற்படுத்துகிறது. தொண்டை வலியையும் ஏற்படுத்துகிறது. சைனஸ் வறட்சியால் பாக்டீரியா தொற்று காரணமாகவும் தொண்டைவலி ஏற்படுகிறது.
 
வைரஸ் பாதிப்பால் ஏற்படும் தொண்டை வலி, பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. உதாரணமாக, குளிர்கால வைரஸ், இன்ப்ளுயன்சா மற்றும் எப்ஸ்டின் – பார் வைரஸ் (சுரப்பு காய்ச்சல் வைரஸ்) போன்ற காரணங்களால் தொண்டை வலி பாதிப்பு ஏற்படுகிறது. இது காற்றில் கலந்த இருமல் சிதறல்களாலும் திடீர் தும்மல்களாலும், கைகளை ஒழுங்காக கழுவாத போதும் தொற்று ஒவ்வொரு நபரையும் பாதிக்கிறது. பெரும்பாலும்,
 
தொண்டைவலி அறிகுறிகள்:
 
* வலியுடன் கூடிய சிவந்த தொண்டை
* டான்சில்கள் வீக்கம்
* விழுங்குவதில் சிரமம்
* காய்ச்சல்
* தலைவலி
 
போன்றவை அறிகுறிகளாக காணப்படுகின்றன. ஸ்டப்டோகாகஸ் வைரஸ் பாதிப்பால் தொண்டைவலி ஏற்பட்டால், டான்சில் பகுதியில், வியர்க்குரு போன்ற கொப்புளங்கள் காணப்படலாம். இதுபோன்று, மேல் அண்ணப் பகுதியிலும் காணப்படலாம்.நோயின் அறிகுறிகளை வைத்து குறிப்பிட்ட நோயை மருத்துவர் அடையாளம் காண்கிறார்.சில நேரங்களில் தொண்டைப் பகுதி சுரப்பு நீர் அல்லது ரத்த மாதிரி பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
 
தொண்டைவலி பெரிய பிரச்சனையை தருவது இல்லை. ஒரு வாரம் வரை இது நீடிக்கும். ஆனால் கீழ்கண்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.இரண்டாம் நிலை தொற்று நடு காது, சைனஸ் அல்லது நெஞ்சுப்பகுதியில் ஏற்படலாம்.தொண்டை வலி இரண்டு வாரத்திற்கு மேலாக நீடித்தால் அது தீவிர நோய்க்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இது தொண்டை புற்று அல்லது எய்ட்ஸ் அறிகுறியாகக்கூட இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
 
எளிய சிகிச்சை முறைகள்:
 
தொண்டை வலி பாதிப்பு உள்ள நேரங்களில், பெரும்பாலான கட்டத்தில், ஓய்வு எடுப்பது நல்லது.பழச்சாறு அல்லது பானங்கள் எடுத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து இழப்பு ஏற்படாது.எலுமிச்சைப் பழச்சாறு தேன், வெந்நீர் ஆகிய கலவை பானம் தொண்டைவலியை குறைக்க உதவுகிறது.பூண்டு சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை தருகிறது. தொண்டை வலி பாதிப்பை வேகமாக நீக்குவதுடன், பாக்டீரியாவை அகற்றவும் பூண்டு உதவுகிறது. அனைத்து வயது தரப்பினரும், பூண்டை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.
 
தொண்டை வலி பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததும், ஏற்கனவே பயன்படுத்திய பல் துலக்கியை (பிரஷ்) தூக்கி எறிந்துவிட்டு, புதிது வாங்கி பயன்படுத்த வேண்டும். அதை தொடர்ந்து பயன்படுத்தினால், மீண்டும் தொண்டை வலி பாதிப்பை ஏற்படுத்தலாம்.தொண்டை வலியை போக்குவதற்கு, எலுமிச்சை சாறுடன், தண்ணீர், வினிகர், உப்பு, மற்றும் இஞ்சிச்சாறு சில துளிகள் சேர்த்து உபயோகிக்கலாம். தொண்டைவலிக்கு பெப்பர் மின்ட், புதினா இலைகள், புதினா மிட்டாய்கள் இதமானதாக இருக்கும். புதினாவில் மென்த்தால் இருப்பதால், அது தொண்டையை குளுமைப்படுத்துவதால், தொண்டை தொற்று பாதிப்பை குறைப்பது போல் இருக்கும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies