ரசாயன பயன்பாடு பெண்களுக்கு மட்டுமே ஏன் கேன்சரை அதிகரிக்கிறது? அதிர்ச்சி தரும் ஆய்வு
19 Sep,2023
ரசாயனத்தை பயன்படுத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதன் பாதிப்பு வெவ்வேறாக இருக்கலாம்! இரசாயனம் மற்றும் புற்றுநோய்க்கும் இடையில் தொடர்பு உள்ளதா?
அதிர்ச்சி தரும் ஆய்வு
வாஷிங்டன்: பரவலாகப் பயன்படுத்தப்படும் பல இரசாயனப் பொருட்கள், பெண்களுக்கு கருப்பை மற்றும் பிற வகையான புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் Disease Control and Prevention (CDC)Disease Control and Prevention (CDC)) சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி கல்வி ஆய்வாளர்கள் குழு நடத்திய ஆய்வில், சில புற்றுநோய்களுக்கு காரணமாகும் ரசாயனங்கள் பற்றிய உண்மைகள் வெளிவந்தன.
புற்றுநோய்களுக்கு காரணமாகும் ரசாயனங்கள்
அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட சமீபத்திய ஆய்வு, Journal of Exposure Science and Environmental Epidemiology (வெளிப்பாடு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொற்றுநோயியல் இதழ்) என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. ஹார்மோனால் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் ரசாயனங்களின் பயன்பாட்டை அதிகம் செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள்
ஹார்மோன் செயல்பாட்டை சீர்குலைக்கும் காரணிகள்: "இந்த PFAS இரசாயனங்கள் பெண்களில் ஹார்மோன் செயல்பாட்டை சீர்குலைப்பதாக தோன்றுகிறது, இது பெண்களுக்கு ஹார்மோன் தொடர்பான புற்றுநோயை அதிகரிக்கும் சாத்தியமான வழிமுறையாகும்" என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஆசிரிய விஞ்ஞானியும் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான அம்பர் கேத்தே தெரிவித்துள்ளார்.