எச்சரிக்கை! உங்கள் கிட்னியை காலி செய்யும் ‘சில’பழக்கங்கள்!
11 Sep,2023
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றுவதே சிறுநீரகத்தின் செயல்பாடு.
சிறுநீர் கழிப்பதை அடக்குவது
ஒரு நபர் ஏதாவது வேலைக்காக பயணம் செய்யும் போதோ அல்லது எங்காவது பயணம் செய்யும் போதோ, அத்தகைய சூழ்நிலையில் ஒருவர் சிறுநீரை அடக்கி வைத்திருக்கும் நிலையை பெரும்பாலும் காணலாம். குறிப்பாக பெண்கள் இந்த பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் நிலை உள்ளது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, பொது கழிப்பறை வசதி இல்லை என்றால், சிறுநீரை அடக்கி வைக்கின்றனர். ஆனால் இப்படி செய்வது சரியல்ல. எபோதாவது என்றால் பாதிப்பு இருக்காது. ஆனால், அடிக்கடி சிறுநீரை அடக்குவதால் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும்.
குறைவான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம்
உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், உங்கள் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பது தான் சிறந்தது. அப்போதுதான் உடலின் மற்ற பாகங்களும் சரியாக செயல்பட முடியும். உடலில் நீர் பற்றாக்குறை இருந்தால், உடலில் இருந்து நச்சு பொருட்கள் வெளியேற முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறுநீரகம் சரியாக இயங்காது. மேலும் இதன் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகின்றன. எனவே, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள நச்சுக்கள் சிறப்பாக வெளியேற உதவுகிறது.
மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிட கூடாது!
சிறுநீரகத்தை சேதப்படுத்தும் உணவுகள்
உணவில் அதிக கவனம் செலுத்தாமல் அவசர அவசரமாக நொறுக்குத் தீனிகளை உட்கொள்பவர்கள் ஏராளம். இது சிறுநீரகங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், உங்கள் உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் புதிய பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளுங்கள். மேலும் அளவிற்கு அதிக உப்பு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிக பொட்டாசியம் உள்ள காய்கறிகளை அளவோடு சாப்பிட வேண்டும். அதிக இனிப்பு உள்ள சோடா வகைகள், குளிர் பானங்கள், அளவிற்கு அதிக இனிப்பு ஆகியவை கிட்னியை காலி செய்து விடும்.
நீரிழிவும் சிறுநீரக பாதிப்பும்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டை மீறினால், படிப்படியாக சிறுநீரகத்தில் இருக்கும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இந்த இரத்த நாளங்கள் பலவீனமடையத் தொடங்கும் போது, சிறுநீரகத்தால் இரத்தத்தை சரியாக சுத்தம் செய்ய முடியாது. இதன் காரணமாக உயர் ரத்த அழுத்த பிரச்சனை தொடங்கி சிறுநீரக பாதிப்பும் ஏற்படும்.