ஹைப்போஸ்பேடியாஸ் எனும் சிறுநீர் குழாய் பாதிப்பிற்குரிய சத்திர சிகிச்சை
23 Jul,2023
-
அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேய நாடுகளில் பிறக்கும் 300 குழந்தைகளில் ஒருவருக்கும், இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பிறக்கும் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கும், ஹைபோஸ்பெடியாஸ் எனப்படும் சிறுநீரை வெளியேற்றும் குழாயின் நுனி பகுதி அமைப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தற்போது சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிறந்த பச்சிளம் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் சிறுநீரை வெளியேற்றும் போதுஸ அதன் நுனிப்பகுதியின் ஊடாக வெளியே வரும்போதுஸ இயல்பான பகுதியில் அமையப்பெற்றிருக்க வேண்டும். சிலருக்கு இத்தகைய சிறுநீரை வெளியேற்றும் குழாயின் நுனிப்பகுதி அதன் அமைப்பில் இயல்பான இடத்தில் இடம்பெறாமல், மேல் பகுதியிலோ அல்லது கீழ்பகுதியிலோ இடம் மாறி அமையப்பெற்றிருக்கும். சிலருக்கு இத்தகைய நுனிப்பகுதி விதைப்பையின் அடியில் இருக்கக்கூடும்.
இதனால் சிறுநீர் இயல்பாக வெளியேறாமல், அசௌகரியத்தை உண்டாக்கும் வகையில் பரவி வெளியேறக்கூடும். ஆண் குழந்தைகளில் சிறுநீர் வெளியேறும் சிறுநீர் குழாயின் நுனிப்பகுதியின் திறப்பு.. இயல்பான இடத்தில் அமையாமல், கீழே அமைந்திருந்தால் சிறுநீர் வெளியேறுவதில் பாரிய சிக்கல் ஏற்படக்கூடும். மேலும் சிறுநீர் வெளியேறும் போது அசாதாரணமான நிலையில் வெளியேறும்.
பொதுவாக இத்தகைய பாதிப்பு பிறவிலேயே இருப்பதால் இதனை உரிய பரிசோதனைகளின் மூலம் கண்டறிய இயலும். மேலும் சிறுநீரக குழாய் உருவாகும்போது இதற்காக சுரக்கும் ஹோர்மோன் சுரப்பியின் செயல்பாட்டில் மாறுபாடு ஏற்பட்டாலும் அல்லது மரபியல் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது என மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் சில தருணங்களில் சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பதன் துல்லியமான காரணத்தை அவதானிக்க இயலாது.
இத்தகைய பாதிப்புள்ள குழந்தைகளை.., குழந்தை சிறுநீரக மருத்துவ நிபுணரை சந்தித்து, அவர்கள் இதற்கென பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். ஆண் குழந்தைகளின் சிறுநீரை வெளியேற்றும் குழாயின் அமைப்பு இயல்பாக இருக்கும் வகையில் பிரத்யேக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. குழந்தை பிறந்த ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் இத்தகைய சத்திர சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு ஓராண்டுகள் வரை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பின் இருக்க வேண்டும். அவர்களுடைய அறிவுரையை முழுமையாக பின்பற்ற வேண்டும்.