எமது உடலில் இருக்கும் பலவகையான சுரப்பிகளில் உள்ளன. அதில் தொண்டைப் பகுதியில் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து இரண்டு சிறகுகள் போல அமைந்திருப்பது தான் தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான முதன்மை நாளமில்லா சுரப்பி இது. இதன் எடை 12 லிருந்து 20 கிராம்வரை தான் இருக்கும்.
இந்த தைராய்டு சுரப்பி குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பின் உறுதி, தசையின் உறுதி, புத்திக்கூர்மை என்பவற்றுக்கு காரணமாக இருக்கின்றது.
தைரோய்டு பிரச்சினை அயோடின் சத்துக் குறைப்பாடு காரணமானமாகவும், பரம்பரை பரம்பரையாக வருவது, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பக்காலத்தில் தாய் சந்திக்கும் மன ரீதியிலான பிரச்சனைகள், தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, அடிக்கடி எமோஷனல் ஆகி ஸ்ட்ரஸ்க்கு உள்ளாவது, உடலுழைப்பு இல்லாமல் இருப்பது போன்றவை தான் இந்தப் பிரச்சினை ஏற்படக் காரணம்.
இதனை சரிசெய்துக் கொள்ள இவ்வாறான உணவுப் பழக்கவழக்கங்களை எடுத்துக் கொண்டால் தைரோய்டு பிரச்சினை உங்கள் பக்கமே வராது.
இந்த நோய்க்கு ஆப்பிள் நல்லது, இதற்கு ஆப்பிள் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக நம்மை வாழ வைக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெர்ரிகளை உண்ணலாம் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
செலினியம் அதிகம் உள்ள காளான், பூண்டு உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். பசலையில் அர்ஜினின், லியூசின், ஐஸோலியூசின், லைசின், திரியோனின் மற்றும் டிரிப்டோபேன் ஆகிய அமினோ அமிலங்களும் பல்வேறு வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கி உள்ளன.
இவற்றோடு சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, கரோட்டினாயிட்ஸ், ஆர்கானிக் அமிலங்கள், வைட்டமின் கே போன்ற ஏராளமான சத்துக்கள் இருப்பதால் இந்த நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
மேலும், முட்டை, தானியங்கள், தேங்காய் எண்ணெய், உருளைக் கிழங்கு, கடல் உணவுகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த தைரோய்ட் உங்களிடம் இருந்து வெகு தூரம் போய்விடும்.