குறட்டை விட்டு தூங்குபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுமா.?
27 Jan,2023
எம்மில் பலரும் இரவு நேரத்தில் படுக்கையில் உறங்கும் போது குறட்டை விடுவது இயல்பு. உலக அளவில் 50 சதவீத மக்கள் இரவு உறக்கத்தின் போது குறட்டை விடுகிறார்கள். ஆனால் இந்த குறட்டை இயல்பான அளவைவிட கூடுதலாக அதிகரித்தால், அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கிறார்கள். மேலும் இன்றைய சூழலில் 10 பெண்களில் ஒருவருக்கும், ஐந்து ஆண்களில் ஒருவருக்கும் குறட்டை நோயாக இருக்கிறது என அண்மைய ஆவின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்குரிய முறையான சிகிச்சையை பெற்றால், இதிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பகலில் 20 அல்லது 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குவது, இரவில் நல்ல உறக்கத்தில் இருக்கும் பொழுது குறட்டையின் காரணமாக மூச்சு திணறி திடீரென்று எழுவது, இரவில் உறக்கமின்மை காரணமாக தவிப்பது, பகலில் நெடுநேரம் தூங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தால்..., இவற்றை அப்ஸரக்டிவ் ஸ்லிப் அப்னியா என மருத்துவர்கள் வகைப்படுத்துகிறார்கள். இவர்களுக்கு இரவு உறக்கத்தின் போது மூளைக்கு செல்ல வேண்டிய ஒட்சிசன் அளவு குறைவதன் காரணமாக மூச்சு திணறலும், மாரடைப்பும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உண்டு என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிலருக்கு இரவு நேர உறக்கத்தின் போது குறட்டையின் காரணமாக பதினைந்து தடவைகளுக்கு மேல் உறக்கத்தை தொலைக்கிறார்கள். இதனால் உடலில் இணை நோய் ஏற்பட்டு, இதய ஆரோக்கியம் பலவீனம் அடைகிறது. மேலும் இதன் காரணமாக நினைவுத்திறன் பாதிப்பு, சோர்வு, கவனத்தைக் குவித்து செயலாற்ற இயலாத நிலை.. போன்றவையும் ஏற்படுகிறது. மேலும் இதன் காரணமாக குருதி அழுத்த பாதிப்பும், உயர் குருதி அழுத்த பாதிப்பும் ஏற்படுவதற்கான சூழலும் உண்டாகிறது. மேலும் சிலருக்கு பக்கவாதமும், புற்றுநோயும் ஏற்படுவதற்கான சாத்திய கூறும் உண்டு.
இதனால் குறட்டை விட்டு தூங்கினாலும் அல்லது தூங்கும் போது குறட்டை விட்டாலோ உடனடியாக அதனை மருத்துவரிடம் சொல்லி, அவர் மேற்கொள்ள வலியுறுத்தும் பரிசோதனைகளை செய்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து முழுமையான நிவாரணத்தை பெற வேண்டும்.