குளிர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள்
12 Jan,2023
தற்போது குளிர்காலம் என்பதால் அனைவருமே குளிர்ச்சியான காலநிலையால் நடுக்கத்தை அனுபவிப்போம். எப்போது காலநிலையானது அளவுக்கு அதிகமாக குளிர்ச்சியாக இருக்கிறதோ, அப்போது தான் ஒருவருக்கு அதிகம் குளிரும். ஆனால் சிலருக்கு லேசாக ஃபேன் ஓடினாலும், குளிரால் நடுங்க ஆரம்பிப்பார்கள். இப்படி மற்றவர்களை விட நீங்கள் அதிகமான குளிர்ச்சியை உணர்கிறீர்களா?
ஆம், ஒருவரது உடலில் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களின் குறைபாடு இருக்கும் போது, அதன் விளைவாக குளிர்ச்சியை அல்லது நடுக்கத்தை சந்திக்க நேரிடும்.
உடலில் இரத்த சோகைக்கு வழிவகுக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. இரத்த சோகை என்பது உடலில் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல போதுமான சிவப்பணுக்கள் இல்லாத போது ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அது உடல் சோர்வு, பலவீனம் மற்றும் அதிகப்படியான குளிர்ச்சி போன்ற அறிகுறிகள் தென்படும்.
விட்டமின் பி12 குறைபாடுகள் அதிக குளிர்ச்சியை உணர வைக்கும். அதுவும் விட்டமின் பி12 அல்லது ஃபோலிக் அமிலம் உடலில் குறைவாக இருந்தால், அது இரத்த சோகையை உண்டாக்குவதோடு, அதிகளவில் குளிர்ச்சியை உணர வைக்கும். ஏனெனில் இரத்த செல்களின் உற்பத்திக்கு விட்டமின் பி12 மிகவும் முக்கியமானது.
இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக இருந்தால், அது அதிகப்படியான குளிர்ச்சியை உணர வைப்பதாக கூறப்படுகிறது. உடலிலுள்ள இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, உடலின் உறுப்புக்கள் மற்றும் திசுக்களுக்கு இரத்த ஓட்டம் சரியாக இல்லாமல், அது அதிகளவில் குளிர்ச்சியை உண்டாக்கும்.
ஒருவரது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது அதிகப்படியான குளிர்ச்சியை உணர வைப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டுமானால், நீர்ச்சத்து சீரான அளவில் இருக்க வேண்டும். நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், அது இரத்த சோகையை உண்டாக்குவதோடு, மோசமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். தைராய்டு பிரச்சினைகள் ஹைப்போ தைராய்டு பிரச்சினை இருந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை மெதுவாக்கி, அதிகப்படியான குளிர்ச்சியை உணர வைக்கும். ஏனெனில் இது மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, உடலில் வெப்ப உற்பத்தியை அதிகரிக்கும். எனவே நீங்கள் திடீரென்று அதிகப்படியான குளிர்ச்சியை உணர்ந்தால், உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கவும் வாய்ப்புள்ளது.